spot_img
8.3 C
London
spot_img
Home தேர்தல் சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: அதிக பெரும்பான்மையுடன் தக்க வைத்துக் கொண்டது பெரிக்காத்தான்!

சுங்கை பாக்காப் இடைத்தேர்தல்: அதிக பெரும்பான்மையுடன் தக்க வைத்துக் கொண்டது பெரிக்காத்தான்!

0
231

நிபோங் திபால், ஜூலை 6-

இன்று நடைபெற்ற சுங்கை பாக்காப் சட்டமன்ற இடைத்தேர்தலில் வேட்பாளர் அபிடின் இஸ்மாயில் வென்றதில் பெரிக்காத்தான் நேஷனல் தனது தொகுதியைத் தக்க வைத்துக் கொண்டது.

அபிடினின் இந்த வெற்றியை இன்றிரவு ஜாவி பொது மண்டபத்தின் அதிகாரப்பூர்வ வாக்குகள் எண்ணிக்கை மையத்தில் தேர்தல் நிர்வாக அதிகாரி கைருல் நிஸாம் ஹஷிம் அறிவித்தார்.

56 வயதுடைய அபிடினுக்கு இத்தேர்தலில் 14,489 வாக்குகள் கிடைத்த வேளையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பக்காத்தான் வேட்பாளரான டாக்டர் ஜொஹாரி அரிஃபினுக்கு 10,222 வாக்குகள் மட்டுமே கிடைத்தன.

இதில் அபாங் பிடின் என்றழைக்கப்படும் நிபோங் திபால் பாஸ் துணைத் தலைவருமான அபிடின் 4,267 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.

காலஞ்சென்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நோர் ஸம்ரி லத்திஃபின் பணிகளை இவர் தொடர்ந்து மேற்கொள்வார்.

-பெரித்தா ஹாரியான்