சைபர் ஜெயா, ஜன. 21-தொழிற்துறைக்கான தண்ணீர் பயனீட்டு வரையறை மீது விதிமுறைகளை ஏற்படுத்தும்படி அரசாங்கத்தை தேசிய குடிநீர் சேவை ஆணையம் (ஸ்பான்) கேட்டுக் கொண்டது.
தங்களின் குளிர்பதன முறைக்கு அதிகளவு தண்ணீர் மற்றும் ஆற்றல் தேவைப்படும் புள்ளிவிவர மையத்தின் நீடித்த மேம்பாட்டை உறுதிப்படுத்துவதில் மத்திய மற்றும் மாநில அரசாங்கம் மிகப் பெரிய பங்கை வகிக்கிறது என்று ஸ்பான் தலைவர் சார்லஸ் சந்தியாகோ தெரிவித்தார்.
“ஆற்றுக்கு வெளியே சேமிப்பு வசதிகளை மேம்படுத்துவது போன்ற தண்ணீர் வள மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்துவதில் மத்திய அரசாங்கம் மாநில அரசாங்கத்திற்குத் தோள் கொடுக்க வேண்டும் “என்று இங்கு நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சார்லஸ் விவரித்தார்.
புள்ளி விவர மையத்தை மேம்படுத்துவதில் மலேசியா நீடித்த முறையைக் கொண்டிருக்கவில்லை. இந்த நடைமுறை தெனாகா நேஷனல் இலக்கு வழிகாட்டி திட்டத்திற்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனிடையே, புள்ளி விவர மையங்களை அமைப்பதற்கு சிலாங்கூர் அரசாங்கம் இதுவரை 27 விண்ணப்பங்களையும் ஜோகூர் 52 விண்ணப்பங்களையும் பெற்றிருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.


