Homeசமூகம்இந்து சமயத்தை இழிவுபடுத்திய விவகாரம்:  செமினியில் போலீஸ் புகார்

இந்து சமயத்தை இழிவுபடுத்திய விவகாரம்:  செமினியில் போலீஸ் புகார்

செமினி, மார்ச் 5 – தைப்பூசத்தில் காவடி எடுப்பதைசிறுமைப்படுத்தும் ஏரா தனியார் வானொலி நிலையத்தைச் சேர்ந்த அறிவிப்பாளர்களின் செயல் குறித்து செமினி போலீஸ் நிலையத்தில் சமூக ஆர்வலர் சந்திரன் ராமசாமி நேற்று புகார் செய்தார்.

சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட அந்த காணொளியில் ஏரா வானொலி நிலையத்தின் அறிவிப்பாளர்கள் இந்துக்களின் காவடி ஆட்டத்தை ஏளனம் செய்திருப்பது ஒட்டு மொத்த இந்துக்களிடையே அதிருப்தியும் வேதனையையும் ஏற்படுத்தியிருப்பதாக சந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பல்வேறு சமயங்களையும் சமயத்தையும் மதிக்கும் அரசாங்கத்தின் தேசிய ஒருமைப்பாட்டு கொள்கை மற்றும் ருக்குன் நெகாரா கோட்பாட்டிற்கு எதிராக ஏரா எப்.எம் ஊழியர்களின் செயல் இருப்பதாக சந்திரன் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார்.

எந்த சமயத்தையும் சிறுமைப்படுத்தும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் சந்திரன் கேட்டுக்கொண்டார்.

 

spot_img

latest articles

explore more