Homeசமூகம்இவ்வாண்டு தேசிய தினம் புத்ரா ஜெயாவில் கொண்டாடப்படும்!

இவ்வாண்டு தேசிய தினம் புத்ரா ஜெயாவில் கொண்டாடப்படும்!

கோலாலம்பூர், ஜூன் 11- இவ்வாண்டுக்கான தேசிய தினக் கொண்டாட்டம் ஜோகூரில் தொடங்கப்பட்டு டத்தாரான் புத்ரா ஜெயாவிலும் மலேசிய தினம் செப்டம்பர் 16ஆம் தேதி பினாங்கிலும் கொண்டாடப்படும் என தகவல் தொடர்பு அமைச்சர் டத்தோ பாஹ்மி பாட்சில் அறிவித்தார்

தேசிய தின பிரகடனம் ஜுலையில் மூவாரில் தொடங்கப்பட்டு முக்கிய கொண்டாட்டம் ஆகஸ்டு 31இல் டத்தாரான் புத்ரா ஜெயாவில் முடிவடையும்.

தேசிய தினத்தின் கருப்பொருள் மடானி அரசை மையமாகக் கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மலேசிய தினமானது பரஸ்பர ஒப்புதலோடு பினாங்கில் கொண்டாடப்படும்.

 

spot_img

latest articles

explore more