அஹமதாபாத், ஜூன் 12-

அஹமதாபாத் விமான விபத்தில் குஜராஜ் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 130 மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் லண்டனில் உள்ள தனது மகளைப் பார்க்க சென்றதாக கூறப்படுகிறது.

இதில் இதுவரை 130 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.

மற்றவர்களைத் தேடும் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. விமானத்தில் 169 இந்தியர்களும், 53 பேர் பிரிட்டன் நாட்டவர்களும், ஒரு கனடா நாட்டவரும் மற்றும் 7 பேர் போர்த்துகலைச் சேர்ந்தவர்களும் பயணம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்று மதியம் 13.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட, ஏர் இந்தியாவின் ஏI171 பயணிகள் விமானம், சில வினாடிகளிலேயே அருகில் விழுந்து விபத்துக்குள்ளானது.

242 பயணிகளுடன் புறப்பட்ட போயிங் 787 ரக ஏர் இந்தியா விமானம், புறப்பட்ட 3 நிமிடங்களிலேயே 15 கி.மீ தொலைவில் உள்ள மேகானி நகரில் விழுந்து நொறுங்கியதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.