செம்புரோங், ஜூன் 23-
ஜொகூர், செம்புரோங் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிஷாமுடின் ஹுசேய்ன் கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்ட காரணத்திற்காக 2023 ஜனவரியில் 6 ஆண்டு காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தார்.
அவரின் சேவை அம்னோவிற்கு மிகவும் தேவைப்படுவதாகக் கூறி ஜொகூர் மந்திரி பெசார் ஓன் ஹாஃபிஸ் காஸி அவரின் தண்டனையை ரத்து செய்து மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டுமென அறைகூவல் விடுத்திருந்தார்.
அது சம்பந்தமாக விளக்கமளித்த அம்னோவின் தகவல் பிரிவு தலைவி அஸாலினா ஒஸ்மான் அது சம்பந்தமான தீர்மானம் அல்லது கோரிக்கை தமக்கு அனுப்பப்படவில்லை என்றும் அப்படி ஒரு கோரிக்கை கிடைக்கப் பெற்றால் அம்னோ தலைமைத்துவம் அது பற்றி விவாதித்து தக்க முடிவை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.
(பொன் முனியாண்டி)


