Homeஅரசியல்ஜசெக மத்திய செயலவையில் இந்தியர்கள்: பயனேதுமில்லை! - டாக்டர் ராமசாமி காட்டம்

ஜசெக மத்திய செயலவையில் இந்தியர்கள்: பயனேதுமில்லை! – டாக்டர் ராமசாமி காட்டம்

கோலாலம்பூர், ஜூன் 26-அண்மையில் ஜசெக மத்திய செயலவைக்கு இந்தியப் பிரதிநிதிகளாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு, முன்னாள் மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் எம்.துளசி ஆகியோர் நியமிக்கப்பட்டதை உரிமை அமைப்பின் தலைவர் டாக்டர் பி.ராமசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த பொதுத் தேர்தலிலும் இடைத் தேர்தல்களிலும் ஜசெவிற்கு இந்தியர்களின் ஆதரவு கடுமையாகக் குறைந்துள்ளதையடுத்து இந்தியப் பிரதிநிதிகள் இருவர் நியமிக்கப் பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மடானி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஜசெக மலாய்க்காரர் அல்லாதோரின் முக்கிய பிரச்சினைகளான மெட்ரிகுலேஷன் கல்வி வாய்ப்பு, வேலை மற்றும் இன்னபிற பிரச்சினைகளின் மீது ஜசெக மெளனம் காப்பதால், இந்தியர்களின் ஆதரவு இன்னும் படுமோசமாகக் குறையும் என்றும் இந்தியப் பிரநிதிகளால் இந்தியர்களின் வாக்குகளை மீண்டும் கட்சிக்குக் கொண்டு வர முடியாது என்றும் டாக்டர் ராமசாமி உறுதியாகக் குறிப்பிட்டார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more