கோலாலம்பூர், ஜூலை 5-

அண்மைய சரிகமப நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்த விஷால் ஸ்ரிமிக்ஸ் மற்றுமொரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியைப் படைக்கத் தயாராகிவிட்டது.

“ஓல்டு இஸ் கோல்டு லைஃப் இன் கேஎல் பாடாத பாட்டெல்லாம் ”எனும் பழம்பாடல் இசை நிகழ்ச்சியே அது.

இந்நிகழ்ச்சி வரும் ஆகஸ்டு 23ஆம் தேதி மாலை மணி 6.30க்கு பத்துகேவ்ஸ், ஷெங்கா மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.

பின்னணி பாடகர்கள் முகேஸ், மூக்குத்தி முருகன், ஜெயஸ்ரீ, ஜீ டிவி சரண் செண்டி, ரஷிதா ஆகியோரோடு உள்நாட்டு பாடகர் எஸ். கிருஷ்ணன் இதில் பங்கேற்கிறார்.

இந்த இசை நிகழ்ச்சி ரசிகர்கள் மனதில் நீங்கா நினைவுகளை தட்டி எழுப்பக்கூடிய ஓர் இசைப் படைப்பாக இது அமையும் என்பது நிச்சயம் .

தாஸ்லி மலேசியா முதன்மை ஆதரவு நிறுவனமாகத் திகழும் இந்த இன்னிசை நிகழ்ச்சிக்கு கேவிடி கோல்டு, வேன் ஆயுர் மற்றும் அட்லாண்டிக் கண்டெய்னர் லைன்ஸ் ஆகியவை துணை ஆதரவு நிறுனங்களாகச் செயல்படவிருக்கின்றன.

பழம் பாடல் விரும்பிகளுக்கு நல்லதோர் இசை விருந்தாக அமையவிருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை www.ticket.com வழி பொது மக்கள் வாங்கலாம்.