Homeமலேசியாபிரதமருக்கு எதிரான கருத்து:தெங்கு மைமூனின் பதவி கால நீட்டிப்புக்குத் தடையானது!

பிரதமருக்கு எதிரான கருத்து:தெங்கு மைமூனின் பதவி கால நீட்டிப்புக்குத் தடையானது!

கோலாலம்பூர், ஜூலை 10-

முன்னாள் தலைமை நீதிபதி தெங்கு மைமூனின் பதவி காலத்தை 6 மாத காலத்திற்கு நீட்டிக்காத காரணம் என்னவென்பதை முன்னாள் அமைச்சர் நஸ்ரி அஸிஸ் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் மால்டாவில் நடந்த 24ஆவது சட்ட மாநாட்டில் உரையாற்றிய தெங்கு மைமூன், நீதிபதிகளின் நியமனத்தில் பிரதமர் தலையிடுவதாகவும், நீதித் துறையில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தார்.

தெங்கு மைமூனின் செயலானது பிரதமர் அன்வார் இப்ராஹிமின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்திருந்ததாகவும் நாட்டிற்கு அந்நிய முதலீட்டைக் கொண்டுவரும் அவரின் அயராத செயல்பாடுகளுக்கு ஊறு விளைவிப்பதாகவும் அமைந்திருந்ததாக நஸ்ரி அஸிஸ் சுட்டிக் காட்டியுள்ளார்.

அந்தப் பிரச்சினைக்குரிய விவகாரத்தை வெளிப்படையாக, அந்நிய நாட்டில் அவர் பேசியிருப்பது மிகவும் தவறு என்றும் அதனைத் தனிப்பட்ட முறையில் பிரதமரிடம் அவர் பேசியிருக்க வேண்டுமென்றும் நஸ்ரி குறிப்பிட்டார்.

இதன் காரணமாகவே தெங்கு மைமூனின் பதவி காலம் நீட்டிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி

 

 

spot_img

latest articles

explore more