Homeமலேசியாகடைசி வரை மலேசியாவின் நினைவிலேயே வாழ்வேன்!துன் மகாதீர்

கடைசி வரை மலேசியாவின் நினைவிலேயே வாழ்வேன்!துன் மகாதீர்

கோலாலம்பூர் , ஜூலை 15-

தமது  இறுதி மூச்சு வரை மலேசியாவை தாம் நேசிக்கவிருப்பதாக நாட்டின் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மன உருக்கத்துடன் கூறியுள்ளார்.

அரசாங்க பதவி மற்றும் அரசியலில் இருந்து தாம் ஓய்வு பெற்றிருந்தாலும்  நாட்டில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி குறித்தும்  தாம் கவலைப்படுவதற்கு இதுவே மூலகாரணம் என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த முதிய வயதில் எதற்காக இன்னும் நாட்டின் அரசியல் நிலைமை குறித்து கேள்வி கேட்கிறீர்கள் என்று பலர் என்னிடம் வினவுகின்றனர்.

“நாட்டின் குடிமகன் என்ற வகையில் நாட்டின் மீது  அக்கறை கொள்ள எனக்கு வலுவான காரணங்கள் உள்ளன” என்றார் துன் மகாதீர்.

தமக்கு வாழ்க்கையில் அனைத்தையும் கொடுத்த நாட்டைப் பற்றி சிந்திக்காமல் இருப்பது மிகவும் கடினமானது.  அவ்வாறு இருப்பது பொறுப்பற்ற செயலாகும் என்று தமது முகநூல் பதிவில் அவர்  விவரித்தார்.

“இது என்னுடைய நாடு. இங்குதான் தாம் பிறந்து வளர்ந்து வாழ்க்கையில் ஓர் உன்னத நிலையை எட்டினேன்” என்றார்.

spot_img

latest articles

explore more