கோலாலம்பூர், ஜூலை 16-

தலைமை நீதிபதி நியமன நடைமுறையை அனைத்துத் தரப்பினரும் மதிக்க வேண்டுமென்றும் அது சம்பந்தமான ஆதாரமற்ற அனுமானங்களைத் தவிர்க்க வேண்டுமென்றும் உள்துறை அமைச்சர் சைபுடின் நசுத்தியோன் கேட்டுக் கொண்டார்.

காலியாக இருக்கும் தலைமை நீதிபதி பதவியானது அரசமைப்பு விதிகளுக்கு உட்பட்டே நிரப்பப்படும் என்பதால், ஒரு குறிப்பிட்ட நபர்தான் தலைமை நீதிபதியாக அமர்த்தப்படுவார் என்ற வதந்தியை பரப்புவோர் அதனை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டுமென்றும் சைபுடின் வலியுறுத்தினார்.

அவர் மேலும் கூறும்போது, மடானி ஆட்சியில் பேச்சு சுதந்திரமும் ஆட்சேப அமைதிப் பேரணியும் அனுமதிக்கப்பட்டாலும் அது பொதுமக்களுக்குத் தொந்தரவாகவும் அசெளகரியத்தை அளிக்கக் கூடியதாகவும் இருக்கக் கூடாதென்றும் வலியுறுத்தினார்.

-பொன் முனியாண்டி