Homeகுற்றவியல்ரோந்துப் பணியின்போது போலீஸ்காரர் வயிற்றில் குத்தப்பட்டார்! 

ரோந்துப் பணியின்போது போலீஸ்காரர் வயிற்றில் குத்தப்பட்டார்! 

கோலாலம்பூர், ஜூலை 31-

இன்று மதியம் கோலாலம்பூர், புடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ஒருவர், நபர் ஒருவரால் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்டார்.

புடு போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த போலீஸ்காரர் குத்தப்பட்டதை அடுத்து, அந்த அசம்பாவிதத்தில் சம்பந்தப்பட்டதாக நம்பப்படும் 56 வயது சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

14 கிரிமினல் குற்றச்சாட்டுகளைக் கொண்ட அந்த நபர், சம்பவ இடத்திலிருந்து தப்பித்து ஓடினாலும், போலீஸாரின் துரித நடவடிக்கையினால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.

 

spot_img

latest articles

explore more