பெட்டாலிங் ஜெயா:
EWRF எனப்படும் கல்வி, சமூகநல ஆய்வு அறவாரியம் ஏற்பாடில் நவம்பர் 8-ஆம் தேதி Menara BAC-இல் மனநல ஆலோசனை மற்றும் சமூக நலன் கலந்துரையாடல் 2025 நடைபெற்றது.
இதில் 200-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், ஆலோசகர்கள், அரசாங்கத் திட்ட அதிகாரிகள் மற்றும் சமூக தலைவர்கள் கலந்து, மலேசிய இளம் தலைமுறையில் அதிகரித்து வரும் மனநலச் சவால்களைப் பற்றி விவாதித்தனர்.
2022 தேசிய ஆரோக்கிய மற்றும் நோய் ஆய்வில், நான்கில் ஒரு மலேசிய இளையோர் மன அழுத்தத்தால் பாதிகப்பட்டுள்ள அறிகுறிகளைக் கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், 13.1% மாணவர்களுக்குத் தற்கொலை எண்ணம் ஏற்பட்டுள்ள நிலையில் 9.85% பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர்.
இந்நிலையில், கலந்துரையாடலில் கலந்து கொண்ட நிபுணர்கள், இளம் தலைமுறையின் மனநலனை இனி புறக்கணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், குடும்பங்கள், பள்ளிகள் மற்றும் சமூகங்களில் மனநல விழிப்புணர்வு ம அவசியம் என்று கலந்துரையாடலில் கலந்து கொண்ட Prof Dr Zubaidah Jamil வலியுறுத்தினார்.
அதுமட்டுமல்லாமல், மனநலம் அனைவரது பொறுப்பு; ஒவ்வொரு செயலும் மற்றவர்களைப் பாதிக்கும். அதனால் விழிப்புடனும் கருணையுடனும் செயல்பட வேண்டும் என்று கலந்துரையாடலில் பேசிய கோகிலவாணி முனியாண்டி நினைவூட்டினார்.

