சென்னை:
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகம் முழுவதும் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் எந்தவிதமான முன் எச்சரிக்கையும் எடுக்காததன் காரணமாக இன்றைக்கு மக்கள் பாதிக்கப்படுகின்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய விஜயபாஸ்கர் ஓரிரு பகுதியில் மட்டும் சென்று பார்த்துவிட்டு, டெங்கு காய்ச்சல் இல்லை, இது...