Homeகுற்றவியல்

குற்றவியல்

மாணவனுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பயிற்சி ஆசிரியர் மீது 6 குற்றச்சாட்டுகள்

ஈப்போ: 14 வயது 3 மாதங்கள் கொண்ட தனது ஆண் மாணவனுக்கு எதிராக பாலியல் தொந்தரவு செய்ததாக சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட 25 வயதுடைய பயிற்சி ஆசிரியர் ஒருவர், ஈப்போ செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டபட்டார் அவர் குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார். முகமது மிஃப்த்ஸால் முகமட் சலானி ஷாம்( வயது 25) என்பவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நீதிபதி ஐனுல் ஷஹ்ரின்...

போதைப்பொருள் உட்கொண்டதாக லான்ஸ் கார்பரலுக்கு எதிராக குற்றச்சாட்டு

ஈப்போ: போதைப்பொருளை உடலில் செலுத்திக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட 26 வயதுடைய காவல்துறை லான்ஸ் கார்பரல் ஒருவர் இன்று ஈப்போ மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டபட்டார். முகமட் ஐசாத் ஸம்லி, ஜொகூர் மாநிலம் செகாமாட் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அவர், மஜிஸ்திரேட் எஸ். புனிதா முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது குற்றத்தை மறுத்து விசாரணை கோரினார். குற்றப்பத்திரிகையின்படி, கடந்த ஏப்ரல் 5-ஆம் தேதி அதிகாலை 5.04...

கண்டித்ததால் ஆத்திரம்: ஆசிரியரை அரிவாளுடன் துரத்திய 9 வயது மாணவன்

  தாய்லாந்து: சகோன் நகோன் பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளியில், வகுப்பு தோழருடன் ஏற்பட்ட தகராறுக்குப் பிறகு ஆசிரியர் கண்டித்ததால் 9 வயது மாணவன் ஆத்திரமடைந்ததாக கூறப்படுகிறது. வீட்டிற்கு அனுப்பப்பட்ட மாணவன் பின்னர் அரிவாளுடன் பள்ளிக்கு திரும்பி ஆசிரியரை நோக்கி ஓடியதால் மாணவர்களிடையே பதற்றம் ஏற்பட்டது. பின்னர் பள்ளி பாதுகாவலர் தலையிட்டு மாணவனை சமாதானப்படுத்தி அரிவாளை பறிமுதல் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மஸ்ஜிட் இந்தியா நில அமிழ்வு: விஜயலட்சுமி குடும்பத்தினர் ரிம 8,24,000 இழப்பீடு கோரிக்கை

கோலாலம்பூர்: கோலாலம்பூர், மஸ்ஜிட் இந்தியா பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட நில அமிழ்வு சம்பவத்தில் உயிரிழந்த இந்தியாவைச் சேர்ந்த ஜி. விஜயலட்சுமியின் குடும்பத்தினர், மலேசிய அரசாங்கம் தகுந்த இழப்பீடாக சுமார் ரிம 824,000 வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த மாதம் கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சாலையோரத்தில் மரம் விழுந்து உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கு ரிம 824,180...

சாலை விபத்தில் புகழேந்தி உட்பட இருவர் உயிரிழப்பு!

மூவார்: ஜொகூர், ஜாலான் மூவார் - பத்து பாஹாட், கிமீ 136-இல் நேற்று மதியம் 12.30 அளவில் லாரி மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களை உட்படுத்திய விபத்தில், மோட்டார்சைக்கிளில் பயணித்த புகழேந்தி பாவேந்தனும் அவரது நண்பரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். நேற்று மதியம் 12.30 மணியளவில், வலதுபுறம் திரும்ப முயன்ற லாரியின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் இந்த துயரம் நிகழ்ந்தது. உயிரிழந்த இருவரும் 21 வயதுடைய...

3 வயது சிறுமிக்கு போதைப்பொருள் தாக்கம்; சமூக ஊடக பிரபலம் கைது!

மலாக்கா: மலாக்காவில் 3 வயது சிறுமி ஒருவரின் இரத்தத்தில் கஞ்சா (THC) கலந்திருந்தது கண்டறியப்பட்டதை அடுத்து, அவரது காப்பாளரின் மகனான 39 வயது சமூக ஊடகப் பிரபலம் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட சிறுமி மலாக்கா மருத்துவமனையில் மயக்க நிலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பின் குணமடைந்த நிலையில், சந்தேக நபர் கடந்த ஏப்ரல் 15 முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். சிறார் சட்டம் 2001-ன் கீழ் போலீஸார்...