அடுக்குமாடி வீட்டின் 26ஆவது
கோலாலம்பூர், ஜூலை 17-
இங்குள்ள யுசிஎஸ்ஐ தனியார் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த மியன்மாரைச் சேர்ந்த சிது ப்போன் மாவ் என்ற ,மாணவன் செராஸ் தாமான் கோனோட் அங்காசா அடுக்குமாடியின் 26ஆவது மாடியில் இருந்து விழுந்து மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் ஜுலை 9ஆம் தேதி காலை 8.30 மணிக்கு நடந்ததை அங்கிருக்கும் ரகசிய காமிரா வழி கண்டு பிடிக்கப்பட்டது.
சவ பரிசோதனைக்குப் பின்னர் மாணவனின் உடல் தொழில் முனைவரான தகப்பனாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், உடல் ஜூலை 22ஆம் தேதி தகனம் செய்ய சொந்த நாட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும் செராஸ் போலீஸ் தலைவர் ஐடில் போன்ஹசான் தெரிவித்தார்.
-பொன் முனியாண்டி


