Homeசமூகம்சமூகம்மூத்த குடிமக்கள், கடும் நோயாளிகளுக்கு  உதவியாளர்கள் தேவை!

மூத்த குடிமக்கள், கடும் நோயாளிகளுக்கு  உதவியாளர்கள் தேவை!

பட்டர்வொர்த், ஆக.8-

மருத்துவமனைகளுக்கு வரும் மூத்த குடிமக்கள் மற்றும் கடுமையான நோய்க்கு ஆளாகியிருக்கும் நோயாளிகள் குறிப்பிட்ட பகுதிகளுக்குச் சென்று சிகிச்சை பெற தெரியாமல் திண்டாடுவது அன்றாட சம்பவங்களாக இருப்பதாக பினாங்கு இந்து அறவாரியம் சுட்டுக்காட்டியுள்ளது.

பல சந்தர்ப்பங்களில் மருத்துவமனை ஊழியர்கள் தாங்களாக முன்வந்து அது போன்ற நோயாளிகளுக்கு உதவி செய்வது நன்றிக்குரிய செயலாக உள்ளது.

எனினும், இது போன்ற நோயாளிகளுக்குப் பரிவோடு ஆதரவுக் கரம் நீட்டி உதவி செய்ய முழு நேர ஊழியர்களை நியமிக்க அரசு பரிசீலிக்க வேண்டுமென கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மருத்துவமனை நிர்வாகங்களும் அரசின் சுகாதார நிலையங்களும் மேற்கொண்ட நோயாளிகளுக்கு உதவ முழுநேர உதவியாளர்களை நியமிக்க  வேண்டுமென பினாங்கு இந்து அறவாரியத் தலைவர் பி. முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more