Homeசமூகம்சமூகம்அந்நியர்கள் மலேசிய சட்டங்களை மதிக்க வேண்டும்! 

அந்நியர்கள் மலேசிய சட்டங்களை மதிக்க வேண்டும்! 

கோலாலம்பூர், ஆக.17-

விசாவைப் பயன்படுத்தி நாட்டிற்கு வரும் அந்நியர்கள் நாட்டின் சட்ட திட்டங்களை மதித்து நடக்க வேண்டுமென உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சட்டங்களை மதிக்காதவர்கள், விசா நிபந்தனைகளை மீறுவோர், நாட்டின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிப்போர், பொது அமைதிக்குப் பங்கம் விளைவிப்போர் மீது தயை காட்டப்படாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

விசா சலுகையானது எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற அனுமதியைத் தரவில்லை என்றும் நாட்டின் சட்டங்களை மீறுவோரின் விசாவை முடக்குதல், பெயர் கருப்புப் பட்டியலில் இடம் பெறச் செய்தல், நாடு கடத்தப்படுதல் போன்ற கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்துறை அமைச்சுக்கு அதிகாரம் வழங்கப்படுள்ளதாக அவர் தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி

 

 

 

spot_img

latest articles

explore more