Homeவிளையாட்டுMIFA Beyond தேசிய கால்பந்து போட்டி: சிலாங்கூர் ஆண்கள் A அணியின் ஜெர்சி அறிமுகம்

MIFA Beyond தேசிய கால்பந்து போட்டி: சிலாங்கூர் ஆண்கள் A அணியின் ஜெர்சி அறிமுகம்

கிள்ளான்:

மலேசிய இந்திய கால்பந்து சங்கம் (MIFA) நடத்த உள்ள 12 வயதுக்குட்பட்ட MIFA Beyond தேசிய கால்பந்து போட்டியில் பங்கேற்கும் சிலாங்கூர் ஆண்கள் A அணியின் ஜெர்சி இன்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த ஜெர்சி அறிமுக விழா நவம்பர் 19 ஆம் தேதி கிள்ளான் மாப்பிள்ளை உணவகத்தில் நடைபெற்றது.

திரு கோவிந்த், டத்தோ டாக்டர் கோபாலகிருஷ்ணன், டத்தோஸ்ரீ விஜய ஆனந்த், பயிற்றுநர்கள் சோம், மணியம், MIFA துணைத் தலைவர் துவான் ராஜேந்திரன் ஆகியோர் இணைந்து சிலாங்கூர் ஆண்கள் A அணியின் புதிய ஜெர்சியை வெளியிட்டனர்.

இப்போட்டியில் பங்கேற்கும் 12 வயதுக்குட்பட்ட கால்பந்து வீரர்கள் அனைவரும் புதிய ஜெர்சியுடன் விழாவில் பங்கேற்றனர்.

கால்பந்து வீரர்களுக்கான ஜெர்சி, ஜாக்கெட், மற்றும் உபகரணப் பைகள் வழங்க உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் ஏற்பாட்டு குழுவான மித்ரா FC நன்றி தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய ஜெர்சி இளம் வீரர்களுக்கு ஒரு புதிய உற்சாகத்தை வழங்கும் என மித்ரா FC தலைவரும் தலைமைப் பயிற்றுநருமான சரஸ்குமார் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்திலுள்ள 99 தமிழ்ப்பள்ளிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 19 சிறந்த விளையாட்டாளர்களில் 12 பேர் இந்த A அணியில் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிலாங்கூர் ஆண்கள் A அணியின் மேலாளர் ஹேமநாதன், துணை மேலாளர் குணசேகர், சரஸ்குமார், மற்றும் MIFA துணைத் தலைவர் துவான் ராஜேந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

எதிர்கால சாம்பியன்களை உருவாக்குவது தான் MIFAவின் தொடர்ச்சியான நோக்கங்களில் ஒன்றெனவும், கால்பந்து வீரர்களுக்கு ஒழுக்கம் அவசியம் எனவும் துவான் ராஜேந்திரன் வலியுறுத்தினார்.

MIFA Beyond தேசிய கால்பந்து போட்டி நவம்பர் 22 அன்று நெகிரி செம்பிலானின் செண்டாயன், அரேனா IRC மைதானத்தில் நடைபெறவுள்ளது.

spot_img

latest articles

explore more