Homeகுற்றவியல்இருவரையும் 4 நாள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

இருவரையும் 4 நாள் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

ஜாசின்:

மலாக்கா, ஜாசினில் பெண் ஒருவரை மடியில் அமரவைத்து பேருந்து ஓட்டிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, 36 வயது ஓட்டுநரும் 21 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டனர்.

ஜாசின் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இந்த ஜோடியை, வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் மசானா சினின் உத்தரவிட்டார்.

முன்னதாக, நேற்று மாலை போலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்த பிறகு கைது செய்யப்பட்ட இவர்கள், இன்று காலை பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

spot_img

latest articles

explore more