Homeஉலகம்சிரியா மீதான இஸ்ரேலின்  தாக்குதல் :பிரதமர் கண்டனம்! 

சிரியா மீதான இஸ்ரேலின்  தாக்குதல் :பிரதமர் கண்டனம்! 

புத்ரா ஜெயா, ஜூலை 17-

சிரியா மீதான  இஸ்ரேலின் வான் தாக்குதலுக்கு எதிராக பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கண்டனம் தெரிவித்தார்.

இந்தத்  தாக்குதலில் பல அப்பாவி மக்கள் பலியானதை பிரதமர் சுட்டிக் காட்டினார்.

அதே  வேளையில், இந்தத் தாக்குதல் இஸ்ரேல் – சிரியா இடையிலான 1974 ஆம் ஆண்டு உடன்படிக்கை மற்றும் சர்வதேச சட்டங்கள் ஆகியவற்றை  மீறுவதாகவும்  அன்வார் சாடினார்.

நீண்ட காலமாக துயரத்தில் வாழ்ந்து  வரும் சிரியா நாட்டு மக்களுக்கு   அமைதியான வாழ்க்கை தேவை என்றார் பிரதமர்.

இதுபோன்ற காலக்கட்டத்தில் சிரியாவிற்கு மலேசியா எப்போதும் துணை நிற்பதோடு  இது போன்ற தாக்குதல்களுக்கு எதிராகவும்  குரல் கொடுக்கும் என்று பிரதமர் திட்டவட்டமாகக் கூறினார்.

spot_img

latest articles

explore more