கோலாலம்பூர், ஜூலை 17-
அடுத்தாண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் இளைஞர் வயது வரம்பு 30ஆகக் குறைக்கப்படும் என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஹன்னா இயோ கூறினார் .
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திருத்தங்களுக்கு ஏற்ப இது நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.
எனினும், இதற்கு சரவாக் மாநிலம் உடன்படவில்லை. அதன் முக்கிய இளைஞர் அமைப்பான சரவாக் ஐக்கிய தேசிய இளைஞர் அமைப்பு மலேசிய சங்கப் பதிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.
இந்த அமைப்பு இளைஞர் அமைப்புகளின் பதிவாளர் அலுவலகத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை என்று 2025ஆம் ஆண்டு ஆசிய பிக்கல்பால் மாநாட்டைத் தொடக்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் பேசினார்.


