Homeசமூகம்சமூகம்ஒப்பந்த மருத்துவர் திட்டம் முற்றிலும் அகற்றப்படும்! 

ஒப்பந்த மருத்துவர் திட்டம் முற்றிலும் அகற்றப்படும்! 

புத்ரா ஜெயா, ஆக. 8-

2016ஆம் ஆண்டு இடைக்கால நிவாரணமாகத் தொடங்கப்பட்ட அரசாங்க ஒப்பந்த மருத்துவர் சேர்ப்புத் திட்டம் முற்றாக அகற்றப்படும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் சுல்கிப்லி அமாட் தெரிவித்தார்.

இத்திட்டமானது கோவிட் பெருந் தொற்று காலத்தில் பல்வேறு சிக்கல்களினால்  அரசு மருத்துவமனைகளில் மருத்துவர் பற்றாக்குறையை ஏற்படுத்தியதாக அவர் சுட்டிக் காட்டினார். .

இந்நிலையில், மருத்துவர் பற்றாக் குறையை நிவர்த்திக்க இனி அரசு நிர்வாகத்தில் மருத்துவர்கள் நிரந்தரப் பதவிகளில் நேரடியாகச் சேர்க்கப்படும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

மேலும், ஜுலை 23 முதல் அரசாங்க மருத்துவமனைகளில் மொத்தம் 4,352 நிரந்தர மருத்துவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

-பொன் முனியாண்டி

 

 

 

 

spot_img

latest articles

explore more