Homeகுற்றவியல்அரச மன்னிப்பு: மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையே அதி முக்கியம்! 

அரச மன்னிப்பு: மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையே அதி முக்கியம்! 

கோலாலம்பூர், ஆக.16- எஸ்ஆர்சியின் 42 மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்த வழக்கில் முன்னாள் பிரதமர் ரஜிப் ரசாக் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது அவர் காஜாங் சிறைச்சாலையில் சிறை தண்டனையை அனுபவித்து வருகிறார்.

2022 ஆகஸ்டு 23ஆம் தேதி, அவரின் சிறைத்தண்டனையை 12 ஆண்டுகளில் இருந்து 6 ஆண்டுகளாகவும் அபராதத் தொகையான 21 கோடி ரிங்கிட்டை 5 கோடியாகவும் குறைத்து, முன்னாள் பேரரசர் சுல்தான் அப்துல்லா அறிவித்திருந்தார்.

இந்தத் தண்டனைக் குறைப்பானது சட்டத்தை மீறிய செயலென்று கூறி அதனை ரத்து செய்ய வேண்டுமென்று வழக்கறிஞர் மன்றம் வழக்கை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

ஒருவரின் தண்டனையையும் அபராதத்தையும் தன்மூப்பாகக் குறைப்பதற்கு பேரரசர் அதிகாரம் இல்லையென்றும் அவர் அரசமைப்பு உட்பட்ட பேரரசர் என்பதால். விதிகளுக்கு உட்பட்டே ஒருவரின் தண்டனையைக் குறைப்பதற்கு மன்னிப்பு வாரியத்தின் ஆலோசனையின் பேரில்தான் செயல்பட்டிருக்க வேண்டுமென வழக்கறிஞர் மன்றத்தின் வழக்கறிஞர் இயோ யாங் போ நீதிமன்றத்தில் வாதிட்டார்.

எனவே, வாரியத்தின் ஆலோசனையின் பேரில்தான் அவரின் முடிவு இருக்க வேண்டுமே ஒழிய, அவருக்கென்ற தனிப்பட்ட அதிகாரம் எதனையும் அரசமைப்பு விதி வழங்கவில்லை என்றும் வழக்கறிஞர் சுட்டிக் காட்டியுள்ளார்.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more