Homeமலேசியாசிலாங்கூரில் கல்வி மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றத்தில் தாமதம் இல்லை: துணையமைச்சர்

சிலாங்கூரில் கல்வி மேம்பாட்டு திட்டங்கள் நிறைவேற்றத்தில் தாமதம் இல்லை: துணையமைச்சர்

கோலாலம்பூர், மார்ச் 11-

சிலாங்கூர் கல்வி மேம்பாட்டு திட்டங்களில் இதுவரை ‘நிறைவேற்றத்தில் தாமதமான திட்டங்கள்’ எதுவும் இல்லை என்று கல்வி அமைச்சின் பதிவுகளை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளதாக துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ தெரிவித்தார்.

ஒரு திட்ட நடவடிக்கையின் முன்னேற்றம் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட கால அட்டவணையை ஒப்பிடுகையில் 2 மாதங்களுக்கு மேல் அல்லது 20 விழுக்காட்டுக்கு மேல் தாமதமானால் அது ‘நிறைவேற்றத்தில் தாமதமான திட்டம்’ என வகைப்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

சிலாங்கூர் உள்ளிட்ட மேம்பட்டு வரும் குதிகளில் புதிய பள்ளிகள் கட்டும் மற்றும் பள்ளிகளை மேம்படுத்தும் திட்டங்கள் கால அட்டவணைப்படி நிறைவேறி ‘நிறைவேற்றத்தில் தாமதமான திட்டங்களாக’ மாறாததை உறுதி செய்ய கல்வி அமைச்சு பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை அமல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

spot_img

latest articles

explore more