சாபாய்:

தாம் பாஸ் கட்சித் தலைவர்களைச் சந்தித்ததாக வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என பகாங் மஇகா தலைவர் V. ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

கடந்த டிசம்பர் 2025-இல் நடைபெற்ற மாநில சட்டமன்றக் கூட்டத்தொடருக்குப் பிறகு தாம் எந்தவொரு பாஸ் தலைவரையும் சந்திக்கவில்லை.

தாம் தொடர்ந்து தேசிய முன்னணியின் (BN) கொள்கைகளுக்கு உறுதுணையாக இருப்பேன் என்றும் சாபாய் சட்டமன்ற உறுப்பினருமான அவர் உறுதிபடக் கூறினார்.