கிள்ளான்:

சிலாங்கூர், கிள்ளான், பண்டார் புக்கிட் ராஜா பகுதியில் குடிபோதையில் இருந்த நபரைத் தட்டிக்கேட்ட பாதுகாப்பு மேற்பார்வையாளர் ஜி. ஆனந்த் (43), ஸ்டீயரிங் லாக்கால் (steering lock) தாக்கப்பட்டார்.

இரண்டு வேலைகள் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்த ஆனந்த், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்; இவருக்கு ஒன்பது மற்றும் 13 வயதில் இரு மகன்கள் உள்ளனர்.

10 குற்றப் பின்னணிகளைக் கொண்ட 40 வயது சந்தேக நபர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.