பத்துமலை:
பத்துமலையில் டிஎஸ்கே குழுமம் 4-ஆவது ஆண்டாக முன்னெடுக்கப்படும் இலவசத் தேவார வகுப்பை டத்தோ சிவக்குமார் இன்று தொடக்கி வைத்தார்.
இவ்வகுப்பில் இதுவரை மொத்தம் 150 மாணவர்கள் பதிவு செய்துள்ள நிலையில், முதல் நாளில் 50 மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆறு மாதங்களாக தேவார வகுப்பில் தொடர்ந்து பங்கேற்று மாணவர்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இலவசமாக வழங்கப்படும் இத்தகைய சமய வகுப்பு வாய்ப்புகளை மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ சிவக்குமார் வலியுறுத்தினார்.
ஆரம்பத்தில் அதிகமான மாணவர்கள் வருவார்கள். ஆனால் காலப்போக்கில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவது வழக்கம். அதனால் மாணவர்கள் தாமாக முன்வந்து தொடர்ந்து வகுப்புகளில் பங்கேற்று, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே வந்தாலும், தேவார வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என்று அவர் கூறினார்.
இலவசத் தேவார வகுப்பு, தமிழ் மொழி, சமய அறிவு மற்றும் பாரம்பரியப் பண்பாட்டை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


