HomeTagsபி.கே.ஆர்

Tag: பி.கே.ஆர்

பி.கே.ஆர். புதிய தலைமைப் பதவிகளை அறிவித்தது

கோலாலம்பூர், ஜூன் 21- பி.கே.ஆர் கட்சியின் புதிய தலைமைப் பதவிகளை தகவல் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸில் அறிவித்தார். இன்று நடைபெற்ற அரசியல் பிரிவு மற்றும் மத்திய தலைமைக் கூட்டத்தில், துணைத்தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரும் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் கூட்டு தேர்தல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். ஃபுஸியா சாலே மற்றும் வில்லியம் லியோங் முறையே பொதுச் செயலாளர், பொருளாளராக தொடர்ந்து...

தனது கணவருடன் நூருல் இசா மெக்கா பயணம்

ஷா ஆலம், ஜூன் 3- இஸ்லாமியர்களின் 5 கோட்பாடுகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற, பி.கே.ஆர். கட்சித் துணைத்தலைவர் நூருல் இசா அன்வார், அவரது கணவர் யின் ஷாவ் லூங்குடன் மெக்கா புறப்பட்டார். டிக்டோக்கில் நூருல் இசாவுக்கு ஆதரவான நூருல் இசா'ஸ் ஃபேன்ஸ் பக்கத்தில், இன்று அதிகாலையில், அத்தகவல் காணொலி வாயிலாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சியின் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய...

தெங்கு ஸப்ருல் விவகாரத்தில் கவனம் தேவை! பி.கே.ஆருக்கு ரபிஸி எச்சரிக்கை.

கோலாலம்பூர், ஜூன் 2- பி.கே.ஆரில் இணைய, முதலீட்டு, வர்த்தகம், தொழில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு ஸப்ருல் அப்துல் அசிஸ் எண்ணம் கொண்டுள்ள நிலையில், அவரை சேர்த்துக்கொள்வதில், அக்கட்சி கவனமுடன் இருக்க வேண்டுமென, முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி எச்சரிக்கை விடுத்தார். ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் உடன்படிக்கையில், தோழமைக் கட்சிகளிடையே உறுப்பினர்கள் கட்சி மாறுவது குறித்து தெளிவாக விவரிக்கப்படவில்லை என்றாலும், அந்நடவடிக்கை தவிர்க்கப்பட...

தெங்கு ஸப்ருல் அமைச்சர் பதவியை துறந்திருக்க வேண்டும்! -அக்மால் சாலே

கோலாலம்பூர், மே, 31- அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆர். கட்சியில் இணையும் முடிவெடுத்துவிட்ட செனட்டர் டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் அப்துல் அசிஸ், அம்னோ சார்பில் அவர் வகித்துவரும் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலே அந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார். இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், கட்சி அழைக்காமல் அம்னோவில் இணைந்திருந்த...

தெங்கு ஸப்ருலின் கட்சி விலகல் கடிதத்தை அம்னோ பெறவில்லை! -அஷ்ரப்

கோலாலம்பூர், மே, 30- கட்சி பொறுப்புகளிலிருந்து, செனட்டர் டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ கடிதத்தை அம்னோ இன்னும் பெறவில்லை என அக்கட்சியின் பொதுச்செயலாளர் டாக்டர் அஷ்ரப் வஜ்டி டுசூக்கி தெரிவித்தார். பி.கே.ஆரில் இணையும் நோக்கில், டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் கட்சிப் பொறுப்புகளிலிருந்து விலகியுள்ளதை, அம்னோ கடுமையாக கருதுகின்றது. ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலுள்ள எந்தவொரு கட்சியும் வெறுமனே இதர கட்சிகளின்...

அம்னோவிலிருந்து விலகி, பி.கே.ஆரில் இணைவதாக, தெங்கு ஸப்ருல் அறிவிப்பு

கோலாலம்பூர், மே, 30- அம்னோ உச்சமன்றம், கோத்தா ராஜா தொகுதி தலைவர், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக, டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் அறிவித்துள்ளார். தமது அம்முடிவு எளிதானது அல்ல. அம்முடிவை எடுப்பதற்கு முன்னர் அம்னோ தலைவரும் துணைப்பிரதமருமான டத்தோ ஸ்ரீ ஸாஹிட் ஹாமீடி, அக்கட்சியிலுள்ள நண்பர்கள் முதலானோருடன் நன்கு கலந்தாலோசித்து எடுத்ததாக, முதலீட்டு-வர்த்தக-தொழில்...