ஈப்போ பிப் 27
இங்கு எண் 20, சுங்கை பாரி நதிக்கரையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாதர் திருக்கோவிலில் 50ஆவது ஆண்டாக மகா சிவராத்திரி விழா சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.
இவ்விழாவை முன்னிட்டு கடந்த 21ஆம் தேதி முதல் உபயங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு ஈப்போ கிந்தா இந்தியர் சங்கத்தின் உபயம் அதன் தலைவர் மு. சௌந்திர பாண்டியன் முன்னிலையில் நடைபெற்றது.

எதிர்வரும் மார்ச் 4ஆம் தேதி நடைபெறவிருக்கும் சிவராத்திரி விழா சிறப்புடன் நடைபெற ஆலய நிர்வாகம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இவ்விழாவை முன்னிட்டு 5-3-2019 ஆம் நாள் நண்பகல் 12 மணிக்கு அருள் மிகு விஸ்வநாதர் பெருமானுக்கும், அருள் மிகு விசாலாட்சிக்கும் ஆராதனை நடைபெறும். அதன் பின்னர் பகல் மணி 1 முதல் 3 வரை ஈப்போ சிவனார் அன்னதான அன்பர்களால் அன்னதானம் வழங்கப்படும்.

இவ்விழாவில் பொது மக்கள பெரும் திரளாக கலந்துக்கொண்டு அருள் பிரசாதம் பெற்றுச் செல்லுமாறு ஆலய நிர்வாகம் கேட்டுக்கொள்கிறது.
தற்பொழுது ஆலய திருப்பணிகள் நடைபெற்று வருவதால் இந்த ஆண்டு இரத ஊர்வலம் நடைபெறாது என்று நிர்வாகம் தெரிவித்துக்கொண்டது.



