கோலாலம்பூர், ஆக.28-
2017 சீ விளையாட்டுப் போட்டி நிறைவடைய இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியிருக்கும் வேளையில் இந்தப் போட்டியின் ஒட்டு மொத்த வெற்றியாளராக மலேசியா வாகை சூடியுள்ளது . திங்கள்கிழமை நண்பகல் 12 .30 மணி அளவில் 100ஆவது தங்கப் பதக்கத்தை வென்றதன் வழி 2017 சீ விளையாட்டுப் போட்டியின் ஒட்டு மொத்த வெற்றியாளர் என்ற பட்டத்தை மலேசியா உறுதி செய்துள்ளது.
அதோடு இவ்வாண்டு 111 தங்கப்பதக்கங்களை வெல்ல வேண்டுமென்ற இலக்குடன் இருந்த மலேசியா நேற்று இரவு 10 மணிக்கு அதை நிறைவேற்றியது. ஸ்குவாஷ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சிவசங்கரி தங்கப்பதக்கம் வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பதக்கப்பட்டியலில் இதர நாடுகள் மலேசியாவைக் காட்டிலும் மிகவும் பின் தங்கியிருப்பதால் மலேசியாவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று நடந்த ஸ்குவாஷ் போட்டியில் மலேசியா 111ஆவது தங்கபதக்கத்தை வென்றது.


