சனிக்கிழமை, அக்டோபர் 20, 2018
அண்மையச் செய்திகள்
கலை உலகம்முதன்மைச் செய்திகள்

புதிய சாதனையை நோக்கி சர்கார்

கோலாலம்பூர், அக் 19 தளபதி விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கியுள்ள திரைப்படம் சர்கார். இத்திரைப்படம் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளிக்கு பிரமாண்டமாக வெளியிடப்படுகின்றது. முன்னதாக வெள்ளிக்கிழமை மலேசிய நேரப்படி இரவு 8.30 சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசரை சமுக தளங்களில் பகிர்ந்து தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதுவரையில் விஜய்யின் மெர்சல் திரைப்படம்தான் யூடியூப்பில் அதிக லைக் வாங்கிய டீசர். அந்த சாதனையை சர்கார் முறியடிக்குமா என்பது

மேலும் படிக்க
குற்றவியல்சமூகம்முதன்மைச் செய்திகள்

பொய் புகார் வழக்கை நிறுத்தியது ஏன்? மலேசிய இந்து சங்கம் கேள்வி

பெட்டாலிங்ஜெயா, அக். 18- தமது முதலாளியின் 5 வயது குழந்தைக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மதுரைவீரன் கிருஷ்ணன் என்பவர் மீது சம்பந்தப்பட்ட முதலாளியின் மனைவி பொய்ப்புகார் அளித்தார். இதனால் மதுரைவீரன் மனஉளைச்சலுக்கு ஆளாகி பின்னர் குற்றமற்றவர் என போலீசாரால் கண்டறியப்பட்டார் என மலேசிய இந்து சங்கத்தின் தலைவர் டத்தோ மோகன் ஷாண் கூறினார். இந்த விவகாரம் தொடர்பில் பொய்ப் புகார் அளித்த அந்த மாதின் மீது வழக்கு விசாரணையில் இருந்தபோது

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

நீதிமன்ற ஆணையின்படி மலேசிய இந்து சங்கத்தின் தேர்தல் நடைபெறும் டத்தோ மோகன்ஷாண்

கோலாலம்பூர், அக். 18- கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் வழங்கிய ஆணையின்படி மலேசிய இந்து சங்கத்தின் மத்திய செயலவைக்கான தேர்தல் 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்கப்படும் என அதன் தலைவர் டத்தோ மோகன்ஷாண் குறிப்பிட்டார். முன்னதாக சனிக்கிழமை கூடும் மலேசிய இந்து சங்கத்தின் உச்சமன்றக் கூட்டத்தில் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்ற முடிவு எடுக்கப்படும் என அவர் செய்தியாளர்களிடம் உறுதிப்படுத்தினார். முன்னதாக மலேசிய இந்து சங்கம் நடத்திய வேட்புமனுத்தாக்கல் செல்லாது என்பதோடு தேர்தலையும்

மேலும் படிக்க
அரசியல்குற்றவியல்முதன்மைச் செய்திகள்

ஸாஹிட் கைது: வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு!

புத்ராஜெயா, அக்.17- அம்னோ தேசியத் தலைவரும் முன்னாள் துணைப் பிரதமருமான டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் (எம்ஏசிசி) கைது செய்யப்பட்டார். அவர் வியாழக்கிழமை மதியம் 3.15 மணியளவில் கைது செய்யப்பட்டதை எம்ஏசிசி உறுதி செய்தது. யாயாசான் அகால் பூடி எனும் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிதி முறைகேடு தொடர்பில் ஸாஹிட் விசாரணை செய்யப்பட்டார். இவர் அந்த அறக்கட்டளையின் தலைவருமாவார். இந்த அறக்கட்டளைக்குச் சொந்தமான வெ.8

மேலும் படிக்க
அரசியல்பொதுத் தேர்தல் 14முதன்மைச் செய்திகள்

1எம்டிபியின் 5.03 கோடி டாலர் கடன் செலுத்தப்பட்டு விட்டது!

கோலாலம்பூர், அக்.18- 1எம்டிபி நிறுவனத்தின் 5.03 கோடி டாலர் கடனை அரசு செலுத்தி விட்டது என நிதியமைச்சர், லிம் குவான் எங் தெரிவித்தார். இதில் இந்த ஆண்டு மட்டும் 1எம்டிபி கடனுக்கு வெ.168.8 கோடி வட்டி செலுத்தப்பட்டுள்ளது. இது ஒன்றும் சிறு தொகையல்ல. இதைத்தான் மக்களும் அரசும் ஏற்க வேண்டியுள்ளது என நாடாளுமன்றத்திற்கு வெளியே நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் குவான் எங் குறிப்பிட்டார். இதனிடையே, கடந்த செப்டம்பரிலிருந்து வரும் நவம்பர்

மேலும் படிக்க
சமூகம்முதன்மைச் செய்திகள்

சீபில்டு மாரியம்மன் ஆலயம் உடைக்கப்படலாம் ! அனைவரும் ஒன்றிணைவோம் – டி மோகன் அழைப்பு

ஷா ஆலாம், அக். 16- ஷா ஆலாம் பழைய சீபில்டு தோட்ட மகா மாரியம்மன் ஆலயத்தை அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்த அவ்வாலயத்தை தகர்க்கும் பணி புதன்கிழமை காலை நிச்சயம் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. ஆலயத்தை காக்க பொதுமக்களால் மட்டுமே முடியும் என மஇகா உதவித் தலைவர் டத்தோ டி.மோகன் குறிப்பிட்டுள்ளார். கட்சிப் பேதங்கள், கொள்கைகளை புறந்தள்ளிவிட்டு 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தை தற்காக்க இந்துக்கள் என்ற அடிப்படையில் நாம்

மேலும் படிக்க
கலை உலகம்சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

50 தமிழ் அலைவரிசைகளை அறிமுகப்படுத்துகிறது கூஃபிலிக்ஸ்!

கோலாலம்பூர், அக். 16- மலேசிய கலை சார்ந்த ரசிகர்களுக்காக 50 தமிழ் தொலைக்காட்சி, செய்தி, இசை நிகழ்ச்சி, வானொலி என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை வழங்குகின்றது கூஃபிலிக்ஸ். மலேசியாவில் உள்ள தமிழர்களும் முழுமையாக பொழுது போக்கு அம்சங்களை அனுபவிக்க வேண்டும் என்ற ஒரே சிந்தனையில் கூஃபிலிக்ஸ் தொலைபேசி ஆப்ஸ், இணையத்தள ஒருங்கிணைப்பு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வழங்கப்படுவதாக அதன் இயக்குநர் டத்தோ கார்த்திக் கூறினார். கூஃபிலிக்ஸ் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளை ஒரே தளத்தில் தருகிறது.

மேலும் படிக்க
சமூகம்சிறப்புச் செய்திகள்முதன்மைச் செய்திகள்

ஐயப்ப பக்தர்களுக்கு சிறப்பு விசா கட்டணம் வேண்டும்!

கோலாலம்பூர், அக். 16- சபரி மலைக்குச் செல்லும் மலேசிய பக்தர்களுக்கு சிறப்பு விசா கட்டணம் விதிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்நிறுத்தி மலேசியாவிற்கான இந்திய தூதரகத்தில் அதற்கான மகஜர் ஒன்றை மலேசிய ஐயப்ப சேவை சங்கம் வழங்கியுள்ளதாக அதன் தலைவர் யுவராஜா கூறினார். ஒவ்வொரு ஆண்டும் நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்களில் சபரி மலைக்கு உலக நாடுகளிலிருந்து அதிகமான பக்தர்கள் பயணமாகின்றார்கள். கேரளாவிற்கு அடுத்து மலேசியாவிலிருந்து தான் அதிகமான ஐயப்ப பக்தர்கள்

மேலும் படிக்க
குற்றவியல்முதன்மைச் செய்திகள்

பூனையை கொன்ற விவகாரம் : கணேஷ் மீது குற்றச்சாட்டு

செலாயாங், அக். 16- 2 நபர்களுடன் சேர்ந்து ஒரு பூனையை சலவைக் கடையில் துணி உலர வைக்கும் இயந்திரத்திற்குள் திணித்ததாக 41 வயது நபர் மீது செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. குத்தகை தொழிலாளியான கே.கணேஷ் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். நீதிபதி ரஷிஹா கஸாலி முன்னிலையில் தமிழில் அவருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. ஏற்கெனவே இதே குற்றச்சாட்டிற்காக டாக்சி ஓட்டுநர் ஏ.மோகன்ராஜ் (வயது 41), பொறியியலாளர் எஸ்.சத்தியா (வயது

மேலும் படிக்க
அரசியல்முதன்மைச் செய்திகள்

எஸ்எஸ்டி வரியால் சிகரெட் விலை உயர்கிறது!

கோலாலம்பூர், அக். 16- இந்த மாத இறுதியில் அல்லது இன்னும் 3 வாரத்தில் சிகரெட் விலை உயரும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஜுல்கிப்லி அகமது கூறியுள்ளார். செப்டம்பர் முதல் தேதி அமல்படுத்தப்பட்ட எஸ்.எஸ்.டி. எனப்படும் விற்பனை சேவை வரிக்கு ஏற்ப இந்த விலை உயர்வு அமைகிறது. எஸ்.எஸ்.டி. காரணமாக அனைத்து புகையிலை சார்ந்த பொருட்களும் விலை உயர்வு காண்பதாக அவர் சொன்னார். சிகரெட் உட்பட அனைத்து புகையிலை

மேலும் படிக்க