Homeகலை உலகம்மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்களுடன் விவேகம் கொண்டாட்டம்

மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்களுடன் விவேகம் கொண்டாட்டம்

ஷாஆலம், ஆக, 29-

மலேசிய அஜித் ரசிகர்கள் மன்றத்தின் ஏற்பாட்டில் விவேகம் சிறப்புக் காட்சி அண்மையில் நடந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள், பார்வையற்றவர்கள் உட்பட 25 பேருக்கு இலவசமாக டிக்கெட்டுகளையும் உணவுகளையும் அஜித் ரசிகர்கள் வழங்கினார்கள்.

அஜித் நடித்து வெளிவந்துள்ள விவேகம் திரைப்படத்தை மலேசியாவில் டி.எஸ்.ஆர். சினிபிலெக்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. அதன் முன்னோட்டக் காட்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் டிஎஸ்ஆர் நிறுவனம் சிறப்பாக செய்து வழங்கியதாக மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தின் தலைவர் தேவேந்திரன் கூறினார்.

மலேசிய அஜித் ரசிகர்கள் டிக்கெட்டின் விலையை காட்டிலும் கூடுதலாக பணம் செலுத்தினார்கள். அதை கொண்டுதான் இந்த மாற்றுத்திறனாளிகளுக்கும், பார்வையற்றவர்களுக்கும் டிக்கெட்டுகள் இலசமாக வழங்கப்பட்டது. முன்னதாக விவேகம் என்ற பெயரிலும் அஜித்தின் உருவம் கொண்ட கேக்கை அவர்கள் வெட்டி, குதூகலமாக இந்த விழாவை தொடங்கினார்கள். இதற்கு ம.இ.கா. இளைஞர் பிரிவு செயலாளர் அரவிந் கிருஷ்ணன், செராஸை சேர்ந்த அழகேந்திரன் ஆகியோர் முழு ஆதரவு வழங்கினார்கள்.

குறிப்பாக இந்த திரைப்படத்தை அவர்களுடன் அமர்ந்து பார்த்ததில் தனி மகிழ்ச்சி கிடைத்தது. அவர்களின் மகிழ்ச்சியைப் பார்க்கும் போது இது போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்த வேண்டுமென்ற எண்ணம் உண்டாகியது என்றார் தேவேந்திரன்.

மலேசிய அஜித் ரசிகர் மன்றம் பலதரப்பட்ட நிகழ்ச்சிகளையும் நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம். வரும் காலங்களில் இந்த நடவடிக்கைகள் தொடருமென அவர் நம்பிக்கை தெரிவித்தார். அதோடு சமூக வலைத்தள ஆதரவாளராக மலேசிய அஜித் ரசிகர் மன்றத்தை இணைத்துக் கொண்ட டி.எஸ்.ஆர். சினிபிலெக்ஸுக்கும் தேவேந்திரன் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

spot_img

latest articles

explore more