Homeமலேசியாவெள்ளப் பேரிடரைச் சமாளிக்க 5,422 துயர் துடைப்பு மையங்கள் !

வெள்ளப் பேரிடரைச் சமாளிக்க 5,422 துயர் துடைப்பு மையங்கள் !

கோலாலம்பூர், திடசம்பர் 1:-

நாடு முழுவதும் சுமார் 5,422 தற்காலிக வெள்ளத் துயர் துடைப்பு மையங்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் அதில் சுமார் 1.55 மில்லியன் மக்களைக் காப்பாற்றும் வசதி கொண்டதாகவும் இருப்பதாக பிரதமர் துறை அமைச்சர் (சிறப்பு விவகாரங்கள்) டத்தோ ஶ்ரீ முகம்மாட் ரிட்ஸூவான் முகம்மாட் யூசோஃப் தெரிவித்தார்.

ஒவ்வொரு துயர் துடைப்பு மையங்களிலும் குறைந்தது 200 பேர் தங்கலாம். அங்கு இருக்கும் அதிகாரிகள் வெள்ளாத்தால் பாதிக்கப்பட்டவர்களிடையே கோவிட்-19 தொற்று பரவுவதைத் தடுக்கும் பொருட்டு தேசியப் பாதுகாப்பு மன்றமும் மலேசிய சுகாதார அமைச்சும் நிர்ணயித்துள்ள எஸ்.ஓ.பி.யை முழுதாகக் கடைபிடித்து சேவையாற்றத் தயாராக இருக்கிறார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் தொடர்பில் மற்ற அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்பட தேசிய பேரிடர் நிர்மானிப்பு நிறுவனமும் (நட்மா) தயாராக உள்ளதை அவர் தெரியப்படுத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களையும் அவர்களிடத்தில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவல் குறித்து நாடாளுமன்றத்தில் கெமாமான் நாடாளுமன்றா உறுப்பினார் சே அகியாஸ் ஹடிட் (பாஸ்) கேட்ட கேள்வி பதிலளிக்கையில் அவ்வாறு குறிப்பிட்டார்.

“தொடர்ந்து விளக்கமளிக்கையில், சுமார் 15,000 கூடாரங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் பயன்பாட்டுக்காக அனுப்பட்டுள்ளன. பின்னர் மேலும் 26,000 கூடாரங்கள் அனுப்பப்படும்.”

இச்சமயத்தில் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவாமல் கடுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய அங்குப் பணிபுரியும் அதிகாரிகளுக்கு தனியாள் பாதுகாப்புக் கருவிகள் கிடைப்பதற்கான ஆயுத்தங்களை மேற்கொண்டு வருகிறது எனவும் கூறினார்.

மேலும், நட்மாவின் ஆலோசனைப்படி, பேரிடர் குறித்த முன்னறிவிப்பை தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஆதரவோடு குறுஞ்செய்தி வழியாக ஓவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரயிலானக் காலத்தில் மக்களுக்குத் தெரிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்தத் திட்டத்தின் வழி வெள்ளத்தால் பாதிக்கப்படும் பொது மக்களின் பாதுகாப்பு கருதி அவர்களுக்கு முன்னெச்சரிக்கைத் தகவலை அனுப்பி அவர்களைத் தயார் நிலையில் இருக்கவும் முன்னேற்பாடுகள் செய்து கொள்ளவும் ஏதுவாக இருக்கும்.

spot_img

latest articles

explore more