Homeஅரசியல்பி.கே.ஆர் கட்சியில் இருந்து விலகினார் சேவியர் ஜெயகுமார் !

பி.கே.ஆர் கட்சியில் இருந்து விலகினார் சேவியர் ஜெயகுமார் !

கோலாலம்பூர், மார்ச் 13 –

பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் சேவியர் ஜெயகுமார் அக்கட்சியில் இருந்து விலகுவதாக இன்று அறிவித்துள்ளார். அக்கட்சியின் மீது அதிருப்தி கொண்டுள்ளதால் கட்சியின் பதவிகளில் இருந்தும் அடிப்படை உறுப்பினர் என்ற நிலையில் இருந்தும் விலகுவதாக அவர் கூறினார்.

கடந்த ஓராண்டு காலமாக கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக நாடு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றினைந்து நாட்டின் பொருளாதாரத்தை சீரமைத்து மக்களுக்கு நல்வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டிய தருணமிது.

தேசிய தடுப்பூசி திட்டம் தொடங்கியிருக்கும் வேளையில், அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு 18 மாதங்கள் பிடிக்கும். இவ்வேளையில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு கொண்டிருக்க வேண்டிய நேரமல்ல என சேவியர் தனது பத்திரிக்கை செய்தியில் தெரிவித்தார்.

எனவே, பி.கே.ஆர் கட்சியில் இருந்து விலக தாம் முடிவு செய்துள்ளதாக சேவியர் தெரிவித்துள்ளார். எனினும் கோலா லாங்காட் நாடாளுமன்ற உறுப்பினராக தம்முடைய சேவையைத் தொடர போவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

spot_img

latest articles

explore more