கோலாலம்பூர் | சூன் 22 :-
இன்று முதல் 14 நாட்களில் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்பட வேண்டும் என அம்னோ கட்சி அரசாங்கத்திற்குக் கெடு வழங்கியுள்ளது.
நாடாளுமன்றம் மிக விரைவில் திறக்கப்பட வேண்டும், அமர்வு நடத்தப்பட வேண்டும் என மாமன்னர் கட்டளையிட்டதைத் தொடர்ந்து அம்னோ கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமாட் ஸாஹிட் ஹமிடி இந்தக் கெடுவை அரசாங்கத்திற்குக் கொடுத்துள்ளார்.
கட்சியின் சட்டவிதி 3 இன் படி, மலாய் ஆட்சியாளர்களைக் காக்கும் நோக்கத்தில் அமைக்கப்பட்டதுதான் அம்னோ. கட்சியின் உச்சநிலை செயற்குழு மன்றத்தின் கூட்டம் ஒன்றூ நடக்கவிருப்பதாகவும் அந்தக் கூட்டத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
மாமன்னரின் கட்டளையைப் போலவே மற்ற மலாய் ஆட்சியாளர்களும் சட்டமன்றக் கூட்டங்கள் நடத்தப்படலாம் எனக் கூறியிருந்தனர். நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படுவதை இன்னும் காலந்தாழ்த்தினால் அது நாட்டிற்கு இழைக்கப்படும் துரோகம் என அகமாட் ஸாஹிட் கூறினார்.

நாட்டின் ஆட்சியமைப்பு பொறுப்புடன் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். அதே சமயம், நாடு தற்பொழுது எதிர்நோக்கியுள்ள கோவிட்-19 பெருந்தொற்றைக் கையாள்வதில் மக்களின் எதிர்ப்பார்ப்பையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
எனவே, நாடாளுமன்றக் கூட்டம் நடத்தப்பட வேண்டும் விவகாரத்தில் மாமன்னர் குறிப்பிட்ட ‘மிக விரைவில்’ எனும் சொல்லாடலை வைத்துக் கொண்டு குளறுபடிகள் செய்யாமல், மலாய் ஆட்சியாளர்களின் ஒருமித்தக் கருத்துக்கு செயல்வடிவம் கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.
இது குறித்து மலேசிய இந்தியர் காங்கிரசின் தேசியத் தலைவர் தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் பேசுகையில், நாடாளுமன்றம் சரியான நேரத்தில் திறக்கப்பட வேண்டும் எனும் வாய்ப்பை ம.இ.கா. வழங்கி இருந்தது எனவும், அரசாங்கம் அதற்குத் தயாராக இருக்கின்றக் காலத்தில் திறக்கப்படும் என அவர் கூறினார்.
நாடாளூமன்ற அமர்வை நடத்த 14 நாட்கள் கெடு வழங்கியுள்ள நிலையில் அதே வழிப்பாதையைப் பின்தொடரவில்லை என அவர் மேலும் சொன்னார்.
இதனிடயே, சட்ட விதிமுறைப்படி நாடாளுமன்றக் கூட்டத்தை உடனடியாக நடத்தப்பட வேண்டும் எனும் முடிவில் மிக உறுதியாக இருப்பதாக மசீச வின் தலைமைச் செயலாளர் சோங் சின் வூன் தெரிவித்தார்.
நாடாளுமன்ற அமர்வுக்கு முன்னர் அனைத்து மக்கள் நிகராளிகளுக்கும் 28 நோட்டீஸ் வழங்கப்பட வேண்டும். இதனால் அவர்கள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கபட வேண்டிய விவரங்களையும் கேள்விகளாஇயும் எழுத்துப் படிவங்களாகத் தயாரிக்க ஏதுவாக இருக்கும் என சொங் சின் வூன் கூறினார்.

அம்னோவிடன் உறுப்புக் கட்சிகளாக இணைந்துள்ள ம.இ.கா.வும் மசீசவும் தேரிய முன்னணியில் மிக உறுதியாக இருக்கின்றன. ஆனால், நாடாளுமன்றம் திறக்கப்பட வேண்டும் எனும் விவகாரத்தில் கட்சியின் நிலைப்பட்டை அவர்கள் தனித்தனியே தெரிவித்துள்ளனர்.
அம்னோ தலைவர் அகமாட் ஸாஹிட்டின் கூற்று அக்கட்சியின் முடிவு. ஒட்டுமொத்த தேசிய முன்னணியின் முடிவு அல்ல. அம்னோவைப் போல ம.இ.கா. அரசாங்கத்திற்கு 14 நாட்கள் கெடு வழங்கவில்லை என தான் ஶ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.


