Homeகுற்றவியல்குழந்தைக்கு மதுபானம் கொடுத்த ஆடவர் கைது !

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த ஆடவர் கைது !

பாலிக் பூலாவ் | 23/6/2021 :-

நேற்று சமூக ஊடகங்களில் மிகத் தீவிரமாகப் பரவிய காணொலியில் ஆடவர் ஒருவர் குழந்தைக்கு மதுபானத்தைக் கொடுப்பது போன்றக் காட்சி பதிவாகி இருந்தது. இச்சம்பவம் பினாங்கு, பாலிக் புலாவ், தெலுக் பகாங் வட்டாரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள வீடொன்றில் நடந்ததாக அறியப்படுகிறது.

அக்காணொலி குறித்தப் புகார் கிடைக்கப்பெற்றவுடன் அக்குழந்தையின் தந்தையான 19 வயது ஆடவரைக் காவல் துறையினர் தெலுக் பகாங்கில் பிற்பகல் 1.30 மணி அளவில் கைது செய்ததாக பாராட் டாயா மாவட்டக் காவல் துறைத் தலைவர் சூப்ரிடெண்டண்ட் கமாருல் ரிஸால் ஜெனால் கூறினார்.

நேற்று சமூக ஊடகங்களில் தீயாய்ப் பரவிய 30 வினாடிக் காணோலியில் ஆடவர் ஒருவர் ஒரு குழந்தைக்கு மதுபானத்தை ஊட்டினார். அது பொது மக்களின் கோபத்தைத் தூண்டியது.

அதனைத் தொடர்ந்து விசாரணைக்காக அந்த ஆடவரைக் காவல்துறையினர் தற்பொழுது தடுத்து வைத்துள்ளனர்.

அந்த ஐந்து மாத ஆண் குழந்தையை மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லபப்ட்டுள்ளது என கமாருல் ரிஸால் குறிப்பிட்டார்.

கைது செய்யப்பட்ட அவ்வாடவர் 14 பழையக் குற்றப் பின்னணியைக் கொண்டவர் எனவும் காவல்துறஐயின் கண்காணிப்பில் இருக்கும் நபர் எனவும் தெரிய வந்துள்ளது என கமாருல் ரிஸால் தெரிவித்தார்.

அவ்வாடவரை குழந்தைகள் சட்டம் 2001 பிரிவு 31(1)(a)இன் படியும் தொடர்பு – பல்லூடகச் சட்டம் 1998 பிரிவு 233இன் படியும் விசாரிக்கத் தடுத்து வைக்கப்படுவார் என கமாருல் ரிஸால் கூறினார்.

spot_img

latest articles

explore more