கோலாலம்பூர் | 20/7/2021 :-
கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நேர்முகச் சந்திப்புக்கானத் தேதி இல்லாமல் “walk in” முறாஇப்படி நேரடியாகவே தடுப்பூசி மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக் கொல்ள அனுமதி வழங்கப்பட்டது. அதே அனுமது நெகிரி செம்பிலான் மாநிலத்திற்கும் வழங்கப்பட வேண்டும் என அம்மாநில அரசு கோரியுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் சுகாதாரத் துறை ஆட்சிக் குழு உறுப்பினர் வீரப்பன் இது குறித்து தெரிவிக்கயில், கடந்த 13 ஆம் நாள் தொடங்கி இங்கு 1,000 க்கும் மேற்பட்ட கோவிட்-19 நேர்வுகள் அதிவு செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து அவ்வாறான அனுமதி கோரப்படுவதாகக் கூறினார்.
இச்சூழல் மிகுந்த கவலைக்குள்ளானது. எனவே, இதிலிருந்து தடுப்பூசி விரைவுப்படுத்தப்படுவதே ஒரே வழி எனத் தாம் கருதுவதாக அவர் குறிப்பிட்டார்.
நேற்று 1.340 நேர்வுகள் நெகிரி செம்பிலானில் பதிவு செய்யப்பட்டுள்ளது.


