Homeமலேசியாகிள்ளானில் மூன்று புதிய கோவிட்-19 தடுப்பூசி மையங்கள் !

கிள்ளானில் மூன்று புதிய கோவிட்-19 தடுப்பூசி மையங்கள் !

கிள்ளான் | 25/7/2021 :-

நாளை முதல் கில்ளான் ஹொக்கியன் மண்டபத்தில் செயல்பட இருக்கும் கோவிட்-19 புதிய தடுப்பூசி மையம் குறித்துத் தான் வரவேற்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சந்தியாகோ தெருவித்துள்ளார்.

நாள் ஒன்றுக்கு 2,000 பேர் வரையில் அங்கு கோவிட்-19 தடுப்பூசி போட்டுக் கொள்ள இயலும்.

கோவிட்-19 அதிகப் பஆதிப்படைந்துள்ள கிள்ளான் பகுதியில் தடுப்பூசி போடப்பட்டுள்ளவர்களின் விழுக்காடு 11.64 ஆகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது மிகக் குறைவான அடைவு நிலை.

மலேசிய தேசியப் புற்றுநோர் அமைப்பு – ஹொக்கியன் மன்றம் உட்பட அரசு – அரசு சாரா அமைப்புகளின் ஒத்துழைப்பில் இந்தத் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டுள்ளதாக சார்லஸ் தெரிவித்தார்.

இதே போன்று, கிள்ளானில் திறாக்கப்பட உள்ள இதர தடுப்பூசி மையங்களால் இங்கு தடுப்பூசி போடப்படுவோரின் விழுக்காடு அதிகரிக்கும் என அவர் கூறினார்.

சோக்கா காக்காய் மண்டபத்திலும் கெமுனிங் உத்தாமா மண்டபத்திலும் தடுப்பூசி மையங்கள் நாளை முதல் திறக்கப்பட உள்ளன. அதே நேரத்தில் விந்தம் தங்கும் விடுதி, பிரிமியர் தங்கும் விடுதி, பண்டாமாரான் விளையாட்டு மையம் ஆகியவற்றில் இயங்கிக் கொண்டுருக்கும் தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

இதனால், கிள்ளானில்  நாள் ஒன்றுக்குத் தடுப்பூசி செலுத்திக் கொள்வோரின் எண்ணிக்கை 20,000ஆக உயர வாய்ப்புள்ளது.

கிள்ளான் வட்டாரத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஏறத்தாழ 942,000 பேர் இருப்பதாகவும் 200,000 பேர் ஆவணமற்ற – புலம்பெயர்ந்தோர் உட்பட வெளிநாட்டுத் தொழிலாளர்களும் அடங்கும். ஆக, ஒட்டுமொத்தமாக அங்கு 1.14 மில்லியன் மக்கள் இருப்பதாக சார்லஸ் குறிப்பிட்டார்.

கடந்த 21/7/2021 அரையில் 87,803 பேர் (11,64%) கிள்ளான் மக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் செலுத்திக் கொண்டுள்ள வேளையில், 208,055 பேர் தங்களின் இரண்டாவது தடுப்பூசிக்காகக் காத்திருப்பதாக அவர் கூறினார்.

இது பெரிய அளவில் அதிகரித்திருக்க வில்லை.

முன்னதாக, இங்குள்ள பலருக்கு ஷா ஆலாமில் தடுப்பூசி போட்டுக் கொல்ள நேர்முகச் சந்திப்பு நாள் கொடுக்கப்பட்டதாக சார்லஸ் தெரிவித்தார்.

தாடுப்பூசி போடப்படும் எண்ணிக்கை கிள்ளானில் அதிகரிக்க சுகாதார அமைச்சை அவ்வப்போது வலியுறித்தி வந்ததாகவும் புதியத் தடுப்பூசி மையங்கள் திறாக்கப்படக் கோரியதாகவும் அவர் சொன்னார்.

நாள் ஒன்றுக்கு 20,000 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டால் 63 நாட்களில் 80 % தடுப்பூசி போடப்பட்டிருக்கும். 100 % தடுப்பூசி போடப்படும் நடவடிக்கைக்கு  83 நாட்கள் தேவைப்படும். குறிப்பாக முழுமையாகச் செயல்பட்டால் மட்டுமே இது சாத்தியம் என அவர் மேலும் தெரிவித்தார்.

மருந்து, உணவு, உற்பத்தித் துறைகள் செயல்பட மூன்று முக்கியமான துறைமுகங்கள் கிள்ளானில் இருக்கின்றன.

இயங்கிக் கொண்டிருக்கும் அத்துறைகளை அனைத்து ஊழியர்களுக்கும் உடனடியாகத் தடுப்பூசி போடப்படுவது மிகவும் அவசியம். இதனால், கோவிட்-19 பரவலைத் தடுப்பதோடு அவர்களின் குடும்பத்தாரையும் பாதுகாக்கும்.

அவ்வூழியர்களின் குடும்பத்தாரிடம் இருந்து தமது தரப்புக்கு நிறைய அழைப்புகள் வருவதாகாவும், அவர்களில் பலர் தடுப்பூசி போடப்படாதவர்கள் எனவும் இதனாலேயே இறப்பு எண்ணிக்கைக்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் சார்லஸ் சந்தியாகோ மேலும் சொன்னார்.

spot_img

latest articles

explore more