கோலாலம்பூர் | 26/7/2021 :-
கோவிட்-19 காரணமாக தனிமைப்படுத்தலில் இருப்பதால் ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று காலை 10.00 மணிக்குத் தொடங்கிய நாடாளுமன்ற சிறப்பு அமர்வுக்கு வரவில்லை.
இரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கோவிட்-19 தொற்று கண்டுள்ள வேளையில் “ஐந்து அல்லது ஆறு” உறுப்பினர்கள் தொற்று கண்டவர்களுடன் நெருங்கிய வட்டத்தில் இருப்பதால் அவர்கள் தனிமைப்படுத்தலில் இருப்பதாக நாடாளுமன்ற அவைத் தலைவர் அஸார் ஹாருன் கூறினார்.
காலியான இருக்கைகளின் அடிப்படையில் அமர்வுக்கு வராத நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியல்
1. அகமாட் ஸாஹிட் ஹமிடி (தே.மு. – பாகான் டத்தோ)
2. ஸுராய்டா கமாருடின் (தே.கூ. – அம்பாங்)
3. முஸ்லிமின் யாஹ்யா (தே,கூ. – சுங்கை பெசார்)
4. முகம்மட் கைருடின் அமான் ரஸாலி (தே. கூ. – கோலா நெரூஸ்)
5. ரீஸால் மெரிக்கன் நைனா மெரிக்கன் (தே.மு. – கப்பாளா பாத்தாஸ்)
6. மன்சோர் ஓத்மான் (தே.கூ. – நி[போங் திபால்)
7. முக்ரீஸ் மகாதீர் (பெஜுவாங் – ஜெர்லுன்)
8. சோவ் கோன் இயோ (ந.கூ. – தஞ்சோங்)
இருந்த போதிலும், இப்பட்டியல் முழுமையாக இல்லை காரணம் எஸ்.ஓ.பி. காரணத்தால் ஊடகவியலாளர்களை உள்ளே அனுமதிக்கவில்லை.
கண்ணாடித் தடுப்பாலும் முகக்கவரியாலும் உறுப்பினர்களின் முகம் அவ்வளவு தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த வாரம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது அதிகாரிகளும் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொண்டனர்.
கடந்த வெள்ளிக்கிழமை வரையில் 12 நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு கோவிட்-19 தொற்று கண்டுள்ள வேளையில், தொற்று கண்டவர்களின் நெருங்கிய வட்டத்தில் இருந்த 58 அதிகாரிகள் தனிமைப்படுத்தலை மேற்கொண்டுள்ளனர் என அஸார் சொன்னார்.


