Homeஅரசியல்ரொனால்டோ மீண்டும் எம்.யூ.வுக்குத் திரும்பும்போது, தே.மு. மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் போகாதா ? அடுத்தப் பொதுத்...

ரொனால்டோ மீண்டும் எம்.யூ.வுக்குத் திரும்பும்போது, தே.மு. மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் போகாதா ? அடுத்தப் பொதுத் தேர்தலில் தேமுவின் கீழ் மக்கள் சக்தி கட்சி போட்டியிடும் ! – தனேந்திரன்

(படங்கள் : தர்வின் குமார்)

கோலாலம்பூர் | 19/9/2021 :-

காற்பந்து போட்டியில் கிறீஸ்டியானோ ரொனால்டோ மீண்டும் எம்.யூ.வுக்குத் திரும்பும்போது, தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியைப் பிடிக்காமல் போகாதா  நிச்சயமாகப் பிடிக்கும். அடுத்தப் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியின் கீழ் மலேசிய மக்கள் சக்தி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் டத்தோ ஶ்ரீ தனேந்திரன் அறிவித்தார்.

தலைநகர் புத்ரா வாணிப மைய மண்டபத்தில் நடைப்பெற்ற மலேசிய மக்கள் சக்தியின் 13- வது ஆண்டுக் கூட்டத்தில் உரையாற்றிய டத்தோ ஶ்ரீ தனேந்திரன் அவ்வாறு தெரிவித்தார்.

கட்சியின் உச்சமன்ற உறுப்பினர்கள் உட்பட உயர் பதவியில் உள்ள 70 பேர் மட்டும் நேரடியாகவும் மற்றவர்கள் நேரலையாகவும் அந்தப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கலப்பு முறையில் நடந்த இந்தப் பொதுக் கூட்டத்தை தேசிய முன்னணியின் தலைவரும் அம்னோ கட்சியின் தலைவருமான டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹ்ஹிட் ஹமிடி தலைமையேற்றார்.

கடந்த 14 -வது தேர்தலில் தேசிய முன்னணி படுதோல்வி அடைந்ததையடுத்து அதனைக் கருப்புச் சரித்திரமாக டத்தோ ஶ்ரீ தனேந்திரன் சித்தரித்தார். தேசிய முன்னணியின் பல உறுப்புக் கட்சிகள் அம்னோ/தேசிய முன்னணிக்கு ஆதரவாக இல்லாமல் சிதறி ஓடினாலும், தே.மு.வின் தோழமைக் கட்சிகள் எனும் அடிப்படையில் மக்கள் சக்தி கட்சி தமது ஆதரவை மீட்டுக் கொள்ளாமல் உறுதுணையாக இருந்து வருவதாக டத்தோ ஶ்ரீ தனேந்திரன் குறிப்பிட்டார்.

கடந்தப் பொதுத் தேர்தலில் பலதரப்பட்ட வாக்குறுதிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் வெற்றி பெற்ற பின்னர் நம்பிக்கைக் கூட்டணி அதனை நிறைவேற்றவில்லை என்பதே உண்மை. எனவே, மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும். எழுச்சி பெற வேண்டும். அதன் விளைவாக தற்போது ஏற்பட்டிருக்கும் அனைத்தும் திருத்தப்பட வேண்டும்.

எனவே, தேசிய முன்னணி மீண்டும் எழுச்சி கொள்ள வேண்டும்,. அதற்கு, மக்களின் எழுச்சி மிக மிக முக்கியம். முந்தைத் தேர்தலில் தவறாகத் தேர்ந்தேடுத்ததை (SALAH PANGKAH) மாற்றி அமைக்க வேண்டும்.

ஓரு தேர்தல், அதில் இரு முறை ஆட்சி மாற்றம், அதன் விளைவாக 3 பிரதமர்கள், இந்தச் சூழல் உலகில் எந்த நாட்டிற்கும் நேராது. தேசிய முன்னணிக்கு மீன்டும் ஆட்சி அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதுவே சிறந்த முடிவு என தனேந்திரன் தமதுரையில் குறிப்பிட்டார்.

இந்தியர்களுக்கும் மலேசியர்களுக்கும் மலேசிய மக்கல் சக்தி கட்சி ஒரு புதிய நம்பிக்கை, ஒரு புதிய எதிர்ப்பார்ப்பு (THE NEW HOPE) எனவும் தனேந்திரன் சொன்னார்.

அடுத்தப் பொதுத் தேர்தலில் கெடா, சிலாங்கூர், பேரா, நெகிரி செம்பிலான், ஜோகூர் ஆகிய மாநிலங்களில் 4 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் தேசிய முன்னணியின் கீழ் மலேசிய மக்கள் சக்தி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளதாகவும் அதில் தாமும் நேரடியாகப் போட்டியிட உள்ளதாகவும் தனேந்திரன் சொன்னார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அப்பொதுக் கூட்டத்தில் இயங்கலை வாயிலாகக் கலந்து கொண்டு தலைமையேற்ற அகமாட் ஸாஹிட் ஹமிடி, பல தேர்தலில் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தேசிய முன்னணியின் வெற்றிக்காக உழைத்த இவர்களது விசுவாசம் போற்றதற்குரியது எனவும் அடுத்தப் பொதுத் தேர்தலில் நிச்சயமாக தேசிய முன்னணியின் கீழ்  போட்டியிட மக்கள் சக்திக்கு வாய்ப்பு வழங்கப்படும் எனவும் கூறினார்.

2009ஆம் ஆண்டு மலேசிய மக்கள் சக்தி கட்சி தோற்றுவிக்கப்பட்டது. தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியாக இல்லாமல் ஆதரவாளர் கட்சியாக மக்கள் சக்தி கட்சி இருந்தது. தற்போது 115,000 உறுப்பினர்களைக் கொண்ட மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 13 ஆண்டு காலக் காத்திருப்புக்குப் பின்னர் இந்த அரிய வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியைத் தருவதாக அக்கட்சியைச் சார்ந்தவர்கள் கருதுகின்றனர்.

spot_img

latest articles

explore more