பெட்டாலிங் ஜெயா | 15/12/2021 :-
அடுத்தாண்டு பிப்பரவரி 1 முதல் இதர வங்கி பணப்பட்டுவாடா இயந்திரப் பரிவர்த்தனைக்கு ரிம 1.00 கட்டணம் மீண்டும் விதிக்கப்படவுள்ளது.

அக்கட்டணம் விதிக்கப்படுவது குறித்து தமது முகநூல் பக்கத்தில் CIMB Malaysia வங்கி தகவல் வெளியிட்டது.

CIMB வங்கியின் பணப்பட்டுவாடா இயந்திரத்தில் பரிவர்த்தனை செய்தால் அக்கட்டணம் விதிக்கப்படாது எனத் தமது வாடிக்கையாளர்களிடம் தெரிவித்ததுவ்

இதனிடையே, Maybank வங்கியும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் நாள் இதர வங்கி பணப்பட்டுவாடா இயந்திரப் பரிவர்த்தனைக்கு விதிக்கப்படும் ரிம 1.00 கட்டணத்தை அரசாங்கம் முடக்கி இருந்தது.



