Homeகுற்றவியல்5 வயது மகன் மரணம் : தூக்குத் தண்டனையை எதிர்நோக்கும் தாயார் காளீஸ்வரி !

5 வயது மகன் மரணம் : தூக்குத் தண்டனையை எதிர்நோக்கும் தாயார் காளீஸ்வரி !

ஜோகூர் பாரு | 15/12/2021 :-

தமது 5 வயது மகன் சாம்சன் போல் மரணத்திற்குக் காரணமாக இருந்த தாயார் காளீஸ்வரி தூக்குத் தண்டனையை எதிர்நோக்குகிறார்.

மஜிஸ்திரெட் நுர்டிமான் மாமாட் முன்னிலையில் அவர் குற்றஞ்சாட்டப்பட்டபோது , அது தமிழ்மொழியில் மொழி பெயர்க்கப்பட்டது. இருந்தும் காளீஸ்வரி மௌனம் சாதித்தார்.

இம்மாதம் 3 ஆம் நாள் காலை 9 மணி முதல் மதியம் 12.20 மணி வரையில் இங்குள்ள தாமன் ஸ்ரீ யாகூப்பில் உள்ள ஒரு வணிக கட்டிடத்தின் மேல் தளத்தில் அவர் குற்றத்தைச் செய்ததாகக் கூறப்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின் 302 ஆவது பிரிவின் கீழ் காளீஸ்வரி மீது குற்றம் சாட்டப்பட்ட பிறகு, அவர் தரப்பிடமிருந்து எந்த மனுவும் பதிவு செய்யப்படவில்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டவுடன் கட்டாய மரண தண்டனை வழங்கப்படும்.

நுர்டிமான் மாமாட் பிப்ரவரி 15, 2022 ஆம் நாளுக்கு அடுத்த விசாரணையை ஒத்திவைத்தார். அந்நாளுக்குள் வழக்கு தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் சொன்னார்.

அரசு தரப்பில் இருந்து வழக்கறிஞர் கைருனிசா ஸைனுடின் வாதாடினார். காளிஸ்வரி தரப்பில் இருந்து எந்த வழக்கறிஞரும் வாதாடவில்லை.

செஷன்ஸ் நீதிமன்றத்தில், காளீஸ்வரியும் அவரது காதலன் ,முகம்மட் இஸ்கண்டார் அப்துல்லா (வயது 32) சிறுவன் சாம்சனை துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டது.

சிறுவர் சட்டம் 2001 இன் பிரிவு 31(1)(a) இன் கீழ் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது 10 ஆண்டுகளுக்கு வரையில் சிறைத்தண்டனை அல்லது RM20,000 வரையில் தண்டம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

காளீஸ்வரி குற்றத்தை ஒப்புக்கொண்டார். ஆனால் , முகம்மட் இஸ்கண்டார் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி பாத்திமா ஜஹாரி முன் குற்றத்தை மறுத்து விசாரணையை கோரினார். குழந்தையின் உடலை உடற்கூறாய்வு செய்து அதன் முடிவுகள் வரும் வரை பாத்திமா காளீஸ்வரியின் தண்டனையை ஒத்திவைத்தார்.

அடுத்த விசாரணைக்காகவும் காளீஸ்வரியின் தண்டனைக்காகவும் சனவரி 27, 2022 நாம் நாலுக்கு ஒத்திவைத்தார்.

பாத்திமா முஹம்மது இஸ்கந்தருக்கு ஒரு உத்தரவாதத்துடன் RM14,000 ஜாமீன் வழங்கியதுடன், வழக்கு தீர்க்கப்படும் வரை மாதத்திற்கு ஒருமுறை அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு வருகை புரிந்து கையொப்பமிட  ஆணையிட்டார்.

துணை அரசு வழக்கறிஞர்கள் கைருனிசா ஸைனுதீனுடன் எம். ரவீனாவும் சாய் இங் ஹென்னும் வழக்குகளை தொடர்ந்தனர்,

சம்பவ நாளான்று நண்பகல் 12.20 மணியளவில் சுல்தானா அமீனா மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி அளித்த புகாரைத் தொடர்ந்து காவல்துறைக்கு அறிவிக்கப்பட்டதாக இஸ்கண்டார் புத்ரி OCPD உதவி ஆணையர் துல்கைரி முக்தார் கூறினார்.

ஐந்து வயது சிறுவன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போதே இறந்துவிட்டான். அவர் வாயில் காயங்களும் உடல் முழுவதும் வீக்கமும் இருந்தன  என்று அவர் கூறினார். காவல்துறை உடனடியாக பாதிக்கப்பட்டவரின் தாயை மருத்துவமனையில் கைது செய்தனர். அதே நாளில் தாயின் காதலன் தாமான் நுசா பெஸ்தாரியில் உள்ள வாடகை வீட்டில் கைது செய்யப்பட்டார் என்று அவர் மேலும் கூறினார்.

spot_img

latest articles

explore more