– நக்கீரன் –
கோலாலம்பூர் | 5/1/2022 :-
மலேசியவாழ் இந்து மக்கள் இன்னும் இரு வாரங்களில் தைப்பூச நன்னாளைக் கொண்டாட இருக்கின்ற வேளையில் முறையான ஆலோசனையைப் பின்பற்றாவிட்டால், பெரிய அளவில் சுகாதார சிக்கலை சந்திக்க நேரிடலாம் என்று மலேசிய முன்னேற்றக் கட்சித் தலைவர் பொன்.வேதமூர்த்தி தெரிவித்துள்ளார். அதே வேளையில் omicron தொற்று பரவ கூடிய அபாயம் குறித்த ஆய்வு மற்றும் அதனை தடுக்க வேண்டிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதாரத்துறையை பணிக்கும்படி பிரதமருக்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
கொரோனா நச்சுயிரியின் புதிய திரிபான ஒமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு(WHO) 26-11-2021-இல் பிரகடனம் செய்த 11 நாட்களுக்குப் பின்னர் ஒற்றுமை அமைச்சர் ஹலிமா சாதிக் 2021 டிசம்பர் 7இல் நாடாளுமன்றத்தில் தைப்பூச ரத ஊர்வலம் இடம்பெறாது என்று அறிவித்தார்.
அப்போது ஒருசில இந்து அமைப்பினரும் அரசியல் தலைவர்களும் எதிர்த்து குரல் எழுப்பினர். இப்பொழுது, கடுமையான ‘எஸ்.ஓ.பி.’ நடைமுறையுடன் அந்த சமய நடவடிக்கை இடம்பெறும் என்று தெரிகிறது.
ஓமிக்ரான் திரிபின் முழு விளைவு மற்றும் தாக்கம், அதன் நடத்தை மற்றும் அது ஏற்படுத்தும் நோயின் தீவிரம் ஆகியவை இன்னும் முழுமையாக அறியப்படாத நேரத்தில் சமூக தலைவர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.
ஒமிக்ரோன் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு அறிவித்தபின், இந்த 5 வார காலத்தில் மனித குலத்தை ஒமிக்ரோன் எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் கண்டு வருகிறோம். தைப் பூச ஊர்வலத் தடைக்கு 5 வாரங்களுக்கு முன் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நேரத்தில் இருந்ததைவிட இப்போது ஒமிக்ரோனின் தாக்கம் எப்படிப்பட்டது என்று தெளிவாகிவிட்டது.
2021 டிசம்பர் முதல் நாளில் ஒமிக்ரோன் தொற்று ஏற்பட்டுள்ளதை அறிவித்த அமெரிக்காவில் 2022 ஜனவரி 1-இல் 3லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு இந்தத் தொற்று பரவியுள்ளது. அமெரிக்க தொற்று நோய் நிபுணர்கள், அமெரிக்காவில் ஒமிக்ரோன் தொற்று மேலும் உயரக்கூடும் என எச்சரித்துள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களாக முழு அடைப்பு, அவரசரநிலை போன்றவற்றால் நாம் அனுபவித்து வரும் பல்வேறு இன்னல்கள், பொருளாதார இழப்புகள் மேலும் தொடரக்கூடாது. பல லட்சம் மக்கள் குழுமக் கூடிய பெரு விழாவில் கடைப்பிடிக்க வேண்டிய sop குறித்து தேசிய பாதுகாப்பு மன்றம் மற்றும் சுகாதரா அமைச்சரின் மௌனம் கவலையை ஏற்படுத்துகிறது.
எனவே, கோவிட்-19 மற்றும் அதன் புதிய ஓமிக்ரான் திரிபால் மலேசியர்களுக்கு ஏற்படக்கூடிய மருத்துவ அபாயத்தைப் பற்றி சிந்திக்கும் அதேவேளை,, தைப்பூசக் கூட்டத்தைப் பற்றி மறுபரிசீலனை செய்யும்படியும் அனைத்து இந்துக்களையும் கேட்டுக் கொள்வதாக ஒற்றுமைத் துறை முன்னாள் அமைச்சருமான பொன்.வேதமூர்த்தி


