Homeகுற்றவியல்அறவாரியத்தின் நிதியை பயன்படுத்துமாறு யாரையும் உத்தரவிட்டதில்லை ! – ஸாஹிட் வாக்குமூலம்

அறவாரியத்தின் நிதியை பயன்படுத்துமாறு யாரையும் உத்தரவிட்டதில்லை ! – ஸாஹிட் வாக்குமூலம்

கோலாலம்பூர் | 13/4/2022 :-

AKAL BUDI அறவாரியத்தின் நிதியை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்துமாறு, தாம் யாரையும் உத்தரவிட்டதில்லை என்று  டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமாட் ஸாஹிட் ஹமிடி இன்று கோலாலாம்பூர் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

மாறாக, அந்த அறவாறியத்தின் அனைத்து செலவுகளையும், தாமே தனிப்பட்ட முறையில் ஏற்றுக் கொண்டதாகவும், அவர்  தமது வாக்குமூலத்தில் பதிவு செய்தார்.

1997-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட AKAL BUDI அறவாரியத்தின் நிதியை உட்படுத்தி, ஊழல், கள்ளப்பணம் பரிமாற்றம், நம்பிக்கை மோசடி போன்ற 47 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தற்காப்பு வாதம் புரிவதற்காக இன்று தொடங்கப்பட்ட முதல் நாள் விசாரணைக்காக டத்தோ ஶ்ரீ டாக்டர் அகமாட் ஸாஹிட் ஹமிடி கோலாலம்பூர் நீதிமன்றம் வந்தார்.

அந்த அறவாரியம் தோற்றுவிக்கப்பட்டக் காலத்தில் அதிலுள்ள பெரும்பாலான நிதி தமது சொந்த பங்களிப்பு என்றும் அப்போதைய அறங்காவலர்களில் ஒருவரான டாக்டர் அகமாட் ஸாஹிட் குறிப்பிட்டார்.

வர்த்தகத்தில் தாம் அதிகம் ஈடுபட்டு பங்குச் சந்தைகளில் பங்குகளை வாங்கி விற்றதன் மூலம் கிடைத்த இலாபம் உட்பட தமது சம்பளமும் சேமிப்புத் தொகையும்தான் அந்த நிதி என்றும் அவர் விளக்கமளித்தார்.

தேவைப்படுவோருக்கு, பள்ளிவாசல்கள், சமயப் பள்ளிகள் போன்வர்களுக்கு பொருளுதவி, நிதியுதவி அழங்குவதற்காக AKAL BUDI அறவாரியம் தொண்டு  பணிகளை மேற்கொள்வதோடு, தாம் அதில் பண பங்களிப்பை செய்ததாக அவர் மேலும் சொன்னார்.

அறவாரியத்தின் அறப்பணிகள் மக்களுக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, 2013-ஆம் ஆண்டு முதல், அரசு தரப்பின் 29-வது சாட்சியான ஜெனரல் தான் ஶ்ரீ முகக்கட் ஹாஷிம் அலி தான் ஶ்ரீ ஷேட் மொக்தார் அல்-புகாரி, தான் ஶ்ரீ ஹலிம் ச ஆட், தான் ஶ்ரீ அகமாட் ஜோஹாரி போன்ற தமது நட்பு வட்டாரங்களின் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more