தமிழ்நேசனின் முன்னாள் நிழற்பட கலைஞர் நிருபர் எம். ரவியின் தாயார் ஆதிலெட்சுமி முருகன் (வயது 72) இன்று காலை காலமானார். உடல்நிலை சரியில்லாத காரணத்திற்காக சில நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அன்னாரின் உயிர் இன்று காலை 6.45க்கு பிரிந்தது.
25 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நேசனின் பணியாற்றிய ரவி பலரால் அறியப்பட்டவர். அவருக்கும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் தங்களின் அனுதாபத்தைப் பகிர்ந்து வருகின்றார்கள்.
அனைவருடன் இன்முகத்துடன் பழக்கக்கூடிய ரவின் தாயார் ஆதிலெட்சியின் இழப்பு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அன்னாரின் இறுதி அஞ்சலி சனிக்கிழமை நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையில் No.95 Taman Desa Anggerik 43500 Semenyih Selangor. எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் நடைபெறும்.
பின்னர் செமினி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். மேல் விவரங்களுக்கு ரவி +60 16-273 0606 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.


