டோக்கியோ, மே 26-
மனிதவள அமைச்சு – The Institute for Japan International Practical Training (JIPT) எனப்படும் ஜப்பான் தொழில்சார் கொள்கை, பயிற்சி மையத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு நாட்டின் பணியாளர்களை வலுப்படுத்தப் பெரிதும் துணை புரியுமென மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தெரிவித்துள்ளார்.
“நானும் மனிதவள அமைச்சின் அதிகாரிகள் கொண்ட குழு ஜப்பானின் தொழில்சார் கொள்கை, பயிற்சி மையத்தைப் பார்வையிட்டோம், இது மனித வளக் கொள்கை மேம்பாட்டில் முன்னணி சிந்தனைக் குழு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு. அதோடு தொழிலாளர் துறை தொடர்பான பிரச்சினைகளில் ஜப்பானிய அரசாங்கத்திற்கான ஆலோசனை அமைப்பாகும்.”

“இந்த JIPT பயணம் உண்மையில் இரு தரப்பினருக்கும் உவுதவவுவதோடு மலேசியத் தொழிலாளர்களை மேம்படுத்துவதில் முதன்மை ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான தொடக்கம்” என்று சரவணன் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.
ஊழியர் நலன் சார்ந்த ஆய்வுகள், திறன்களை மேம்படுத்தும் திட்டங்கள், சமீபத்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ‘மறு-திறன்’ (re-skilling) மற்றும் ‘மாற்றுத் திறன்’ (cross skilling) திட்டங்கள், அத்துடன் எதிர்காலத் தொழில் வாய்ப்புகள் மற்றும் திறன்களுடன் மலேசியப் பணியாளர்களைத் தயார்ப்படுத்துதல் உள்ளிட்ட ஒத்துழைப்புத் துறைகள் விவாதிக்கப்பட்டன என்று சரவணன் மேலும் கூறினார்.
ஜப்பானுக்கு மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி அதிகாரப்பூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார். அவருடன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ சரவணனும் உடன் சென்றுள்ளார்.
குறிப்பாக14 இலக்கு துறைகளில் அனுபவம் மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்காக மலேசியத் திறமையான தொழிலாளர்களை ஜப்பானுக்கு அனுப்புவது தொடர்பான ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் (MoC) மலேசியா – ஜப்பான் கையெழுத்திட உள்ளன.
புரிந்துணர்வு உடன்படிக்கை ஒப்பந்தம் நாளை வெள்ளிக்கிழமை மலேசியப் பிரதமர் டத்தோ ‘ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் மற்றும் ஜப்பான் பிரதமர் Fumio Kishida ஆகியோரின் முன்னிலையில் கையெழுத்திடப்படும்


