Homeசமூகம்பேரா மஇகா இளைஞர் பிரிவின் உயர்க்கல்வி இலட்சிய பயணம்

பேரா மஇகா இளைஞர் பிரிவின் உயர்க்கல்வி இலட்சிய பயணம்

பேரா, ஜூன் 29-

அண்மையில் வெளியாகிய எஸ்பிஎம் தேர்வு முடிவுகளைப் பெற்ற இந்திய மாணவர்களுக்கு உயர்க்கல்வி தொடர்பான சரியான வழிகாட்டலை வழங்கும் நோக்கத்தோடு தேசிய மஇகா இளைஞர் பிரிவும் பேரா மாநில மஇகா இளைஞர் பிரிவும் இணைந்து கடந்த 26.06.2022 அன்று பேரா மாநிலத்தில் ஈப்போ & சுங்கை சிப்புட் வட்டாரத்தில் உயர்க்கல்வி இலட்சிய பயணம் எனும் வழிகாட்டி கருத்தரங்கை ஏற்பாடு செய்தனர்.

இக்கருத்தரங்கில் அரசாங்க உயர்க்கல்விக்கூடங்கள், மெட்ரிகுலேசன், ஆசிரியர் கல்விக் கழகம் ஆகியவற்றுக்கான புதிய விண்ணப்பங்களை மேற்கொள்ளுதல், விண்ணப்பங்களைச் சரிசெய்தல், உபகாரச் சம்பளங்களை விண்ணப்பிப்பதற்கான விளக்கங்கள் ஆகியன வழங்கப்பட்டதோடு, மாணவர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாகச் சந்திந்து அவரவர் தேர்ச்சிக்கு ஏற்ற சரியான உயர்க்கல்வி பாதைக்கு வழிக்காட்டும் அங்கமும் இடம்பெற்றது.

இக்கருத்தரங்கை தேசிய மஇகா இளைஞர் பிரிவின் கல்விக் குழுவைச் சேர்ந்த சதீஸ்குமார் இலட்சுமணன் வழிநடத்திய வேளையில், சுலுத்தான் இட்ரிஸ் & துங்கு அப்துல் இராமான் பல்கலைக்கழக மாணவர்கள் நெரியுரைஞர்களாக செயலாற்றினர். இக்கருத்தரங்கிற்கு மஇகா மத்தியச் செயலவை உறுப்பினர்களான கேசவன் கந்தசாமி & அர்வின் கிருஷ்ணன் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர்.

இக்கருத்தரங்கம் வெற்றியடைய வழிவகுத்த மஇகா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், பேரா மாநில மஇகா தலைவர் டத்தோ இளங்கோ, புந்தோங் சட்டமன்ற ஒருங்கிணைப்பாளர் ஜெயகோபி, சுங்கை சிப்புட் தொகுதித் தலைவர் மணிமாறன், இளைஞர் பிரிவுத் தலைவர் சுரேஷ் பாபு என அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக பேரா மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் தியாகசீலன் கணேசன் கூறினார்.

கருத்தரங்கிற்கு வருகையளித்த மாணவர்களை ஒருநாள் மட்டும் வழிகாட்டிவிடாது, அவர்களின் உயர்க்கல்விக்கு பேரா மஇகா இளைஞர் பிரிவு தொடர்ந்து பக்கபலமாக இருக்கும் என அவர் மேலும் குறிப்புட்டார்.

spot_img

latest articles

explore more