Homeசமூகம்1,000 அங்காடி வியாபாரிகளுக்கு உதவிக் கரம்! -பதிவுக்கான இறுதி நாள் ஜூலை 15

1,000 அங்காடி வியாபாரிகளுக்கு உதவிக் கரம்! -பதிவுக்கான இறுதி நாள் ஜூலை 15

கோலாலம்பூர், ஜூலை 14-

நாட்டிலுள்ள அங்காடி வியாபாரிகளின் மேம்பாட்டிற்குத் தோள் கொடுக்கும் வகையில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கம் மலேசிய இந்திய சமூக உருமாற்று பிரிவுடன் (மித்ரா) இணைந்து உதவ திட்டமிட்டுள்ளது.

இரவு சந்தை, உணவு விற்பனை, பூக்கடை, பால் வியாபாரம் உள்ளிட்ட சாலையோரங்களில் சிறு வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு உதவ தாங்கள் திட்டமிட்டிருப்பதாக கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக சங்கத்தின் தலைவர் நிவாஸ் ராகவன் தெரிவித்தார்.

கூடாரம்,குடை, மேசை ,நாற்காலி, செண்டோல் இயந்திரம் போன்றவற்றோடு வியாபாரத்திற்குத் தேவையான இதர அத்தியாவசிய சாதனங்களை தாங்கள் வழங்கவிருப்பதாக நிவாஸ் விவரித்தார். அடுத்த 4 அல்லது 5 ஆண்டுகளுக்குத் தேவையான இந்த உதவி பொருட்களுக்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் விண்ணப்பம் செய்யலாம் என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த உதவி திட்டம் தொடர்பான தகவல் அங்காடி வியாபாரிகளைச் சென்றடையும் பொருட்டு மகளிர் இயக்கம், உணவு டிரக் சங்கம் போன்றவற்றோடு சமூக வலைத் தளங்கள் மற்றும் தகவல் சாதனங்களின் ஒத்துழைப்புடன் செய்தியை வழங்கி வருவதாகவும் சொன்னார்.

இதற்கு வியாபாரிகள் இணையம் வழி விண்ணப்பிக்க வேண்டும் கூகல் பாரம் வழி என்னென்ன பொருட்கள் வேண்டும் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

சிலாங்கூரில் இச்சங்கத்தின் பிரதிநிதி நியமிக்கப்பட்டிருப்பதால் சம்பந்தப்பட்ட நகராண்மைக் கழகம் வாயிலாக வியாபார லைசென்சுகளூக்கு விண்ணப்பம் செய்யலாம் என்றார் அவர்.

spot_img

latest articles

explore more