Homeசமூகம்காஜாங் சட்டமன்றம், இந்திய சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் 2022 தீபாவளி முறுக்கு சுடும் விழா

காஜாங் சட்டமன்றம், இந்திய சமூகத் தலைவரின் ஏற்பாட்டில் 2022 தீபாவளி முறுக்கு சுடும் விழா

காஜாங், அக்.19-
தித்திக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காஜாங் வட்டாரத்தில் உள்ள வசதி குறைந்த இந்தியர்களுக்கு உணவுக்
கூடைகள் மற்றும் வெ.100 ரொக்கத் தொகையை காஜாங் சட்டமன்ற உறுப்பினர் ஹி லோய் சான் கடந்த 16ஆம் தேதி
(ஞாயிற்றுக்கிழமை) வழங்கினார்.

சிலாங்கூர் மாநில பக்காத்தான் ஹரப்பான் அரசு மேற்கொண்டு வரும் சமூக நலத் திட்டங்கள் குறித்து இந்நிகழ்வில்
ஹி லோய் சான் பேசினார். சிலாங்கூர் மாநில மக்கள் நன்மை அடையும் வகையில் ஏராளமானத் திட்டங்களை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தொடங்கி வைத்துள்ளார்.
இத்திட்டங்களில் பங்கேற்று இந்திய சமுதாயம் நன்மை அடைவது தொடர்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. காஜாங்
சட்டமன்றமும் இந்திய சமூகத் தலைவரும் இணைந்து ஏற்பாடு செய்த இந்நிகழ்வில் முறுக்கு சுடும் விழா
நடைபெற்றதோடு அன்புளிப்புகள், உணவுக் கூடைகளும் வழங்கப்பட்டன.

காஜாங் சுற்று வட்டார மக்களுக்காக ஒவ்வோர் ஆண்டும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. இதற்கிடையில்
பேசிய இந்நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் ராஜ்குமார் பெருமாளு, சட்டமன்ற உறுப்பினர் ஹி லோய் சான்
இந்தியர்களுக்காக நிறைய திட்டங்களை மேற்கொண்டுள்ளார். இந்திய சமூக சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு நிறைய
ஆதரவுகளையும் வழங்கியிருப்பதாகக் கூறினார்.

spot_img

latest articles

explore more